இலங்கை செய்திகள்

கிளிநொச்சியின் வறட்சி தொடர்பில் விசேட கலந்துரையாடல்

22 Jul 2017

கிளிநொச்சி மாவட்டத்தில் நிலவிவரும் வறட்சியான காலநிலை காரணமாக ஏற்பட்டுள்ள பிரச்சினைகள் தொடர்பான விசேட கலந்துரையாடல் ஒன்று கிளிநொச்சியில் இடம்பெற்றுள்ளது.

குறித்த கலந்துரையாடலானது இன்று சனிக்கிழமை காலை 9.30 மணியளவில் கிளிநொச்சி மாவட்டச்செயலக மண்டபத்தில், மாவட்ட அரச அதிபர் சுந்தரம் அருமை நாயகம் அவர்களின் தலைமையில் நடைபெற்றுள்ளது.

மேற்படி கலந்துரையாடலில் கரைச்சி – பூநகரி பிரதேச செயலாளர்கள், பிராந்திய சுகாதார சேவைகள் திணைக்களம், அனர்த்த முகாமைத்துவ திணைக்களம், கால்நடை அபிவிருத்தி திணைக்களம், விவசாய திணைக்களம் போன்றவற்றின் அதிகாரிகள் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டிருந்தனர்.

கிளிநொச்சி மாவட்டத்தில்  வறட்சியினால் குடிநீர் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளதுடன், விவசாயம், கால்நடை, மீன்பிடி உள்ளிட்ட பல்வேறு துறைகளில் காணப்படும் பிரச்சினைகள் குறித்து ஆராய்வதற்காகவே இந்த கலந்துரையாடல் இடம்பெற்றதாக கூறப்படுகின்றது.

இதே வேளை,அனர்த்த முகாமைத்துவ அமைச்சர் அனுர பிரியதர்சன யாப்பா நேற்றைய தினம் கிளிநொச்சிக்கு விஜயம் மேற்கொண்டு வடமாகாணத்தின் வறட்சி நிலை தொடர்பில் துறைசர்ந்த அதிகாரிகளுடன் ஆலோசனை செய்திருந்தமை குறிப்பிடத்தக்கது.


கருத்துரைகள்


கருத்துரைகள் இல்லை


 

தொடர்புடைய செய்திகள்

Inayam TV