இலங்கை செய்திகள்

கிராமப்புற பொருளாதார அமைச்சு பதவியை ஏற்றுக் கொள்ளப் போவதில்லை - ரஞ்சித் மத்தும பண்டார

12 Jun 2019

தனக்கு ஒதுக்கப்பட்டுள்ள கிராமப்புற பொருளாதார அமைச்சு பதவியை ஏற்றுக் கொள்ளப் போவதில்லை என அமைச்சர் ரஞ்சித் மத்தும பண்டார தெரிவித்துள்ளார்.

குறித்த அமைச்சிற்கு கீழ் எந்த முக்கிய நிறுவனமும் வரவில்லை என்பதனாலேயே அதனை ஏற்றுக்கொள்ளப் போவதில்லை எனத் தெரிவித்தார்.

அந்தவகையில் தனக்கு ஒதுக்கப்பட்டுள்ள புதிய அமைச்சின் கீழ் ஏழு பொருளாதார மையங்கள் மட்டுமே, தனது கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டுள்ளது என்றும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

எனவே அதில் முக்கிய நிறுவனங்கள் உள்ளடக்கப்படாதமையினால் அப் பதவியை ஏற்க மாட்டேன் என ஆங்கில ஊடகம் ஒன்றுக்கு தெரிவித்துள்ளார்.


கருத்துரைகள்


கருத்துரைகள் இல்லை


 

தொடர்புடைய செய்திகள்