கனடா செய்திகள்

கியூபெக் மருத்துவமனைகளில் நோயாளர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு

12 Jan 2018

கியூபெக் மருத்துவமனைகளில் நோயாளர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதால் அவசர மருத்துவப் பிரிவுகளில் நோயாளர்கள் நிரம்பி வழிவதாக தெரிவிக்கப்படுகிறது.

குளிர்கால சளிக்காய்ச்சல் நோய்களாலேயே குறித்த மருத்துவமனைகள் ஸ்தம்பித்து போயுள்ளதாக மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்துள்ளது.

இதுகுறித்து மொன்றியல் யூத பொது மருத்துவமனையின் தலைமை அதிகாரி ஒருவர் கூறுகையில், குளிர்கால சளிக்காய்ச்சல் நோய்கள் ஏற்படும் காலப்பகுதியின் நடுப் பகுதியாக தற்போதய காலப்பகுதி உள்ளதனால், இந்த எண்ணிக்கையில் அதிகரிப்பு ஏற்பட்டுள்ளது. கடந்த சனிக்கிழமை தனது மருத்துவமனையின் அவசர மருத்துவ விடுதிகள் 175 சதவீத நோயாளர்களை கொண்டிருந்தது. ஏனைய மருத்துவமனைகளிலும் ஏறத்தாழ அதே நிலைமை காணப்படுகின்றது என கூறினார்.


கருத்துரைகள்


கருத்துரைகள் இல்லை


 

தொடர்புடைய செய்திகள்