கனடா செய்திகள்

கியுபெக்கை சேர்ந்த தாய் ஒருவர் கொடுத்த புகார்

13 Feb 2018

கனடா-கியுபெக்கை சேர்ந்த தாய் ஒருவர் தனது 12வயது மகளிற்கு தலையில் ஏற்பட்ட அதிர்ச்சியை பரிசோதிக்க அவசர சிகிச்கை பிரிவில் 10-மணித்தியாலங்கள் காத்திருக்க வேண்டிய நிலைமை ஏற்பட்டது குறித்து புகார் கொடுத்துள்ளார். அது மட்டுமன்றி நீண்ட நேர காத்திருப்பு குறித்து மற்றைய பெற்றோர்களையும் புகார் கொடுக்குமாறு வலியுறுத்தியுள்ளார்.

கியுபெக்கில் வசிக்கும் ஜூடி ஷாவெர், தீர்ப்பாயத்தில் மக்கில் பல்கலைகழக சுகாதார மையத்திற்கெதிராக புகார் ஒன்றை பதிவு செய்துள்ளார்.

இவரது மகள் அலெக்ஸ்சான்ட்ரா வுளொயிட் பாடசாலை செல்கையில் மொன்றியல் சுரங்க ரயில் பாதையில் உள்ள படிக்கட்டுகளில் இருந்து விழுந்ததால் சிறுவர் வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டார். படிகளில் விழுந்த போது விளிம்பில் இவரது தலை மோதியுள்ளது.

பாடசாலையில் அலெக்சான்ட்ராவிற்கு கடுமையான தலைவலி ஏற்பட பாடசாலை தாயாரை அழைத்தது. தலைக்குள் யாரோ குத்துவது போன்ற நிலை ஏற்பட்டுள்ளது. வைத்தியசாலை ஊழியர் தனது கவலைகளை நிராகரித்ததாக ஷாவெர் தெரவித்தார்.

நேரம் செல்லச் செல்ல பெண்ணிற்கு காய்ச்சல் போன்ற அறிகுறிகளும் தென்பட ஆரம்பித்தது. சம்பவத்திற்கு வைத்தியசாலை மன்னிப்பு கோரியுள்ளது.

தங்களிற்கு ஏற்பட்ட நிலை மற்றவர்களிற்கும் ஏற்பட கூடாதென நினைத்த தாய் தீர்ப்பாயத்தில் புகார் செய்துள்ளார்.


கருத்துரைகள்


கருத்துரைகள் இல்லை


 

தொடர்புடைய செய்திகள்