வாழ்வியல் செய்திகள்

கிடப்பில் கிடக்கும் வெடுக்கு நாறிமலை! (சிறப்புக் கட்டுரை)

05 Jan 2019

வெடுக்குநாறிமலை  ஆதிலிங்கேஸ்வரர் ஆலயப்பிரச்சினை வெளித்தோன்றி கிட்டத்தட்ட ஒரு வருடமாகிறது. ஆனால் அதற்க்கான எந்தத் தீர்வும் இதுவரை  கிடைக்கவில்லை. இந்த ஒரு வருடத்திற்குள் மக்கள் போராட்டம், அரசியல் பிரதிநிதிகளுடனான சந்திப்புக்கள், கடிதங்கள், கூட்டங்கள், எச்சரிக்கைகள், அச்சுறுத்தல்கள் எனப்பலவற்றைக் கடந்தாயிற்று.

 

 

 

 

ஆலயத்தின்தற்போதையநிலை

எல்லைக் கிராமமக்களின் மிகுந்த நம்பிக்கைக்குரிய கடவுள் எழுந்தருளியிருக்கும் முக்கியமலையாக வெடுக்கு நாறிமலை காணப்படுகின்றது. . அப்பிர தேசமக்கள் நீண்டகாலமாகவே அம்மலைக்கு சென்று  வழிபட்டு வந்தமைக்கான போதிய ஆதாரங்கள் இருந்தும், இப்போது யாரும்சுதந்திரமாக சென்று வழிபட்டு வரமுடியாத சூழல் நிலவுகின்றது.
அதுவும் தற்போது வன்னியெங்கும் ஏற்பட்டபெரும் வெள்ளப்பெருக்கின் பின்னர் வெடுக்கு நாறிமலைக்கு செல்வதே  சிக்கலுக்குரியதாக மாறியிருக்கின்றது. 

ஆலயத்திற்கு செல்லும் பிரதான வீதியின் இருமருங்கிலும் காணப்படும்பற்றைகள் வீதியைமூடி காணப்படுகின்றன. இதனால் ஆலயத்திற்கு செல்பவர்கள் பல சிரமங்களுக்கு முகங்கொடுக்கின்றனர். இவ்வாறு வீதியை மறைத்து நிற்கும் பற்றையை அகற்ற முற்பட்டால் வனவள பாதுகாப்பு பிரிவினர் பிரசன்னமாகித் தடுத்து நிறுத்துகின்றனர்.
அத்தோடு மழைகாலத்தில் வெள்ளம் வீதியைக் குறுக்கறுத்து பாய்ந்தால், அதுவும் முதலை முதுகு போலசீர் குலைந்திருக்கிறது. வீதியில் மூன்றுக்கும் மேற்பட்ட இடங்களில் பெரிய கிடங்குகள் ஏற்பட்டிருக்கின்றன.

மலைஉச்சியிலும், அடிவாரத்திலும் பற்றைகள் வளர்ந்துள்ளதனால் மக்களால் வழிபாடு செய்ய முடியாத நிலையில் இருக்கின்றனர். அதனை அகற்றுவற்கு நடவடிக்கைகளை மேற்கொண்டாலும்  வனவளப் பகுதியினர் நேரடியாகக்களத்திற்கு வந்து தடுத்து விடுகின்றனர்.

 

ஆலயத்தைமீட்பதற்கானநடவடிக்கைகள்

வெடுக்கு நாறிமலை ஆதிலிங்கேஸ்வரர் ஆலயவிவகாரம் தொடர்பில் பொதுமக்களால் மேற்கொள்ளப்பட்ட போராட்டத்தத்தைத் தொடர்ந்து, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்குக் கடிதம் ஒன்று அனுப்பிவைக்கப்பட்டது. அக்கடிதம் அனுப்பப்பட்டு பல மாதங்கள் கடந்துள்ள நிலையில் இதுவரையில் அதற்கான எவ்விதப் பதிலும் கிடைக்கவில்லை.
முன்னாள் எதிர்கட்சி தலை வரும் தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவருமான இரா.சம்பந்தன், தற்போதைய இந்து சமய விவகாரங்களுக்கான அமைச்சர்மனோகணேசன், தமிழ் பாராளுமன்ற உறுப்பினர்கள் ,முன்னாள் வடமாகாண முதலமைச்சர் மற்றும் மாகாணசபை உறுப்பினர்கள் என பலதரப்பட்டவர்களுக்கும் இப்பிரச்சினை தெரியப்படுத்தியதோடு நேரிலும் வருகைதந்து பார்வையிட்டும் சென்றனர்.
அத்தோடு் பிரதேச ஒருங்கிணைப்பு குழுக்கூட்டம், மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுக்கூட்டம் என்பவற்றிலும் குறித்த விவகாரம் தொடர்பில் ஆராயப் பட்டும் இதுவரை எந்தவிதமான சாதகமான பதிலும் கிடைக்கவில்லை. தற்போது எல்லாதரப்பினருமே மௌனித்திருக்கின்றனர்.

ஏணிப்படிக்குவந்தகாசு

வெடுக்கு நாறிமலை ஆதிலிங்கேஸ்வரர் ஆலயமானது,  மலையடிவாரத்திலும், மலையின் உச்சிப்பகுதியிலும் அமைந்திருப்பதனால், அனைத்து அடியார்களும் மலையின் உச்சத்திற்கு  சென்று வழிபட முடியாதநிலை இன்றுவரை நிலவுகின்றது.

குறித்தவிடயம் வடக்குமாகாண பண்பாட்டு அலுவல்கள்திணைக்களத்திற்கு ஆலயநிர்வாகத்தினரால் தெரியப்படுத்தப்பட்டது. அதன் அடிப்படையில் நான்குலட்சம் ரூபாய் பணத்தினை  தருவதாகவும் அதற்கு ஏணிப்படி அமைக்கு மாறும் பண்பாட்டு அலுவல்கள் திணைக்களத்தினால் அறிவுறுத்தப்பட்டது.

பண்பாட்டு அலுவல்கள்திணைக்களத்தின் அறிவுறுத்தலுக்கமைய அமைக்கப்பட்ட ஏணிப்படியின் செலவு  எட்டு லட்சம் ரூபாயைத்தாண்டிவிட்டது. மிகுதி நான்கு லட்சம் ரூபாபணம் ஆலய நிர்வாகத்தினரால் வழங்கப்பட்டே ஏணிப்படிதயாரிக்கும் நடவடிக்கைகள் பூர்த்தியாகின.

இவ்வாறு ஏணிப் படிதயாரிக்கப்பட்டாலும் அதனை ஆரம்பித்தநாளில் இருந்து இன்று வரைக்கும் பல்வேறு அச்சுறுத்தல்கள் ஏற்படுத்தப்பட்டன.  அதனை தயாரிக்கும் கடை உரிமையாளர் தொடக்கம் ஆலய நிர்வாகத்தினர்வரை  சம்பந்தப்பட்ட அனைவரையும் நெடுங்கேணி பொலிஸார் பல தடவைகள் அழைத்து  எச்சரித்தும், அச்சுறுத்தியும் இருக்கின்றனர்.

ஏணிப்படியை மலையில் பொருத்தினால் பலர் கைது செய்யப்படலாம்

பொலிஸார், புலனாய்வாளர்களின் அச்சுறுத்தலின் மத்தியில் தயாரிக்கப்பட்ட ஏணிப்படிதற் போதுமற்று மொருசவாலை எதிர் கொள்ள வேண்டியிருக்கிறது. அண்மையில், பூர்த்தி செய்யப்பட்ட நான்கு ஏணிப்படிகளில் ஒன்றினை ஆலயப் பூசகரின் வீட்டில் வைப்பதற்காக  நிர்வாகத்தால் எடுத்து வரச்சென்ற போது நெடுங்கேணி பொலிஸாரினால் தடுக்கப்பட்டனர்.
அதன் பின்னர் பொலிஸாருக்கும் ஆலய நிர்வாகத்தினருக்கு மிடையே இடம் பெற்ற கலந்தரையாடலில் "நீங்கள் இதனை மலைக்குக் கொண்டு சென்று பொருத்தினால் அனைவரையும் பல வருடங்கள் சிறையில் அடைக்க வேண்டிவரும்" என ஆலய நிர்வாகத்தினர் பொலிஸாரால் எச்சரித்து அனுப்பப்பட்டனர்.

எச்சரிப் பின் பின்னர் கொண்டு வரப்பட்ட ஒரு ஏணிப்படிதற்போது ஆலய பூசகரின் முற்றத்தில்  வைக்கப்பட்டிருக்கின்றது. ஏனைய மூன்று ஏணிப்படிகளும் அதனைத்த யாரித்தவரின்கடை முற்றத்தில் இருக்கின்றன.

கிணறுஅமைக்கவந்தபணம்

மக்கள் நடமாட்டமுள்ள கிராமத்திலிருந்து மூன்று கிலோ மீற்றர்தூரத்தில், காட்டின் நடுப்பகுதியில் ஆலயம் அமைந்திருப்பதனால் அங்கு குடிநீர் வசதிகள் எதுவுமில்லை. திருவிழாகாலங்கள், ஏனைய பூசைநாட்கள் போன்றவற்றுக்கு வவுனியாவடக்கு  பிரதேசசபையின்  உதவியுடனேயே நீர் வழங்கப்படுகின்றது. இதனை  கருத்திற்கொண்டு வன்னி மாவட்டபாராளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தன் அவர்களின் பன்முகப்படுத்தப்பட்ட நிதி ஒதுக்கீட்டிலிருந்து ஆலய சூழலில் குழாய்கிணறு ஒன்றை அமைக்க 130,000.00 ரூபாய் நெடுங்கேணி பிரதேசசெயலகம் ஊடாக வழங்கப்பட்டது.

அண்மையில் இந்தநிதியைப் பயன்படுத்தி, ஆலய  நிர்வாகத்தினரால் கிணறுஅமைக்கும் பணிகள்முன்னெடுக்கப்பட்டன.  அப்போது அவ்விடம் வந்த பொலிஸார், கிணறு அமைக்கும் பணிகளில் ஈடுபட்டிருந்தவர்களை அச்சுறுத்தி வெளியேற்றியிருந்தனர். இதன் பின்னர் குறித்த நிதிமீளச் செல்லவாய்ப் பிருந்தமையினால், ஆலயத்திற்கு செல்லும் வீதிக்கு அருகாமையில் இருந்த குடும்பம் ஒன்றுக்கு ஆலய நிர்வாகத்தினரால் கிணறு அமைத்துக் கொடுக்கப்பட்டது. 

வீதிபுனரமைப்புக்குவந்தபணம்

ஆலயத்திற்கு செல்லும்பிரதான வீதி பள்ளமும் மேடுமாகக்காணப்பட்டமையால் அதனை சீர்செய்யும் நோக்குடன் வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர்சாந்தி சிறிஸ்கந்தராஜா அவர்களின் பன்முகப்பட்ட நிதி ஒதுக்கீட்டிலிருந்து 15 லட்சம்ரூபாய்  வவுனியா வடக்கு பிரதேசசபைக்கு ஒதுக்கப்பட்டது.

குறித்த நிதியூடாக வீதியை புனரமைப்பதற்கு எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் அனைத்துமே தோல்வியில் முடிவடைந்தன. இறுதியில் ஒதுக்கப்பட நிதிமீளத்திரும்பி வாய்ப் பிருந்ததமையினால் ஒதுக்கப்பட நிதியினைப் பயன்படுத்திப்பால மோட்டை கிராமமக்களின் போக்குவரத்து நலனை கருத்திற்கொண்டு் அந்தக்கிராமத்துக்கான பிரதான வீதி தற்போது புனரமைப்பப்பட்டு வருகின்றது.

இவ்வாறு வெடுக்குநாறி மலை ஆதிலிங்கேஸ்வரர் ஆலயத்தின் அபிவிருத்திக்காக கடந்தவருடம் ஒதுக்கப்பட்ட நிதி அனைத்துமே ஆலயத்தின் தேவைக்காக சரியான முறையில் பயன்படுத்தப்படாமல் நிர்வாகத்தின் நேரடி கண்காணிப்பில் வேறு ஒரு தேவைகளுக்காக வேபயன்படுத்தப்பட்டு வருகின்றது.

வனவளப் பாதுகாப்பு திணைக்களத்தினர், தொல்லியல் திணைக்களத்தினர், நெடுங்கேணி பொலிஸார் ஆகிய மூன்று தரப்பினரதும் தொடர்ச்சியான தலையீடுகள் – அச்சுறுத்தல்கள் காரணமாக வெடுக்கு நாறிமலை ஆதிலிங்கேஸ்வரர் ஆலய சூழலில் எவ்விதமான அபிவிருத்தி நடவடிக்கைகளையும் முன்னெடுக்க முடியாத நிலை காணப்படுகின்றது.
இவ்வாறான தடைகள் தொடர்ந்தும் நீளுமாயின் தமிழ் சமூகத்தின் வழிபாட்டு உரிமைக்கும் இந்த அரசு வேட்டு வைத்தாகவே அமையும்.

இணையத்திற்காக, து. தமிழ்செல்வன்


கருத்துரைகள்


கருத்துரைகள் இல்லை


 

தொடர்புடைய செய்திகள்