இந்தியா செய்திகள்

காஷ்மீர் நிதி மந்திரி நீக்கம்

13 Mar 2018

காஷ்மீர் மாநில நிதி மந்திரியாக இருப்பவர் ஹசீப் திரபு. அண்மையில் டெல்லி சென்ற இவர், ‘காஷ்மீர் விவகாரம் அரசியல் தொடர்பானது அல்ல. அது சமுதாயம் தொடர்பான பிரச்சினை’ என்று கருத்து தெரிவித்து இருந்தார். காஷ்மீர் பிரச்சினைக்கு அரசியல் ரீதியாக தீர்வு காணும் முயற்சியில் மக்கள் ஜனநாயக கட்சி ஈடுபட்டு வரும் நிலையில், அந்த கட்சியின் மந்திரியே இவ்வாறு கருத்து தெரிவித்தது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது.

குறிப்பாக காஷ்மீர் பள்ளத்தாக்கு பகுதி மக்கள் மத்தியில் இதற்கு கடும் எதிர்ப்பு கிளம்பியது. இதனையடுத்து நிதி மந்திரி பதவியில் இருந்து ஹசீப் திரபுவை முதல்-மந்திரி மெகபூபா முப்தி நேற்று அதிரடியாக நீக்கினார்.

 

 

 


கருத்துரைகள்


கருத்துரைகள் இல்லை


 

தொடர்புடைய செய்திகள்