இந்தியா செய்திகள்

காஷ்மீர் உள்ளாட்சி தேர்தலை புறக்கணிப்பதாக காங்கிரஸ் அறிவிப்பு

09 Oct 2019

ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தில் உள்ள 316 வட்டாரங்களுக்கான வட்டார வளர்ச்சி கவுன்சில் தேர்தல், வருகிற 24ஆம் தேதி நடைபெறவுள்ளது. ஆகஸ்ட் 5 ஆம் தேதி 370 வது பிரிவின் கீழ் அதன் சிறப்பு அந்தஸ்து ரத்து செய்யப்பட்டதிலிருந்து மாநிலத்தில் நடைபெறும் முதல் தேர்தல் இதுவாகும்.

தேர்தல் நடைபெறும் நாளிலேயே வாக்குகள் எண்ணப்பட்டு முடிவுகளை அறிவிக்கவும் திட்டமிடப்பட்டுள்ளது. என்பதால் இத்தேர்தல் அதிக கவனத்தையும் ஈர்த்துள்ளது.

இந்நிலையில், இத்தேர்தலில் தங்களது கட்சி போட்டியிடப்போவதில்லை என காங்கிரஸ் கட்சி தெரிவித்துள்ளது. இதுகுறித்து தெரிவித்துள்ள அம்மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.ஏ. மிர், மாநிலத்தின் பல்வேறு தலைவர்கள் இன்னும் வீட்டுக் காவலிலிருந்து விடுவிக்கப்படாத நிலையில், தேர்தலில் எவ்வாறு பங்கேற்க முடியும் என கேள்வி எழுப்பியுள்ளார்.

தேர்தலை அறிவிப்பதற்கு முன்பாக அரசியல் கட்சிகளுடன் தேர்தல் ஆணையம் கலந்து ஆலோசித்திருக்கவேண்டும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
 


கருத்துரைகள்


கருத்துரைகள் இல்லை


 

தொடர்புடைய செய்திகள்