இந்தியா செய்திகள்

காஷ்மீரி இளம்பெண், கால்பந்து அணி கேப்டன் ஆனார்

06 Dec 2017

ஜம்மு மற்றும் காஷ்மீரில் கடந்த வருடம் போலீசார் மீது கல்வீச்சு நடத்திய இளம்பெண் அப்ஷான் ஆசிக் (வயது 23).  இந்த சம்பவத்திற்கு பின் அவர் கால்பந்து விளையாட்டு வீராங்கனை என்பது வெளியுலகிற்கு தெரிய வந்தது.

அதன்பின்னர் அவர் ஜம்மு மற்றும் காஷ்மீர் முதல் மந்திரி மெஹபூபா முப்தியை சந்தித்துள்ளார்.  இதனை தொடர்ந்து மாநிலத்தில் அப்ஷான் மற்றும் பெண்கள் கால்பந்து விளையாட்டை ஊக்கப்படுத்த முப்தி முடிவு செய்துள்ளார்.

இதனால் ஜம்மு மற்றும் காஷ்மீரின் பெண்கள் கால்பந்து அணியின் கேப்டன் மற்றும் கோல்கீப்பர் ஆகியுள்ளார் அப்ஷான்.  தனது 22 உறுப்பினர்கள் அடங்கிய கால்பந்து அணி, பயிற்சியாளர் சத்பல் சிங் கலா ஆகியோரோடு மத்திய உள்துறை மந்திரி ராஜ்நாத் சிங்கையும் அவர் நேற்று சந்தித்துள்ளார்.  இந்த சந்திப்பில் இந்திய விளையாட்டு கழகம் ஒன்றை காஷ்மீரில் தொடங்க வேண்டும் என சிங்கிடம்  அவர் கேட்டு கொண்டுள்ளார்.

கல்வீச்சு சம்பவத்திற்கு வருத்தம் அடைந்துள்ளீர்களா? என கேள்வி எழுப்பியதற்கு பதிலளித்த அவர், போலீசார் ஒருவர் தகாத வார்த்தைகளை பேசினார்.  கால்பந்து மைதான பாதுகாப்பில் ஈடுபட்ட சக உறுப்பினர் ஒருவர் அடித்து தாக்கப்பட்டார்.  அதனால் எழுந்த ஆத்திரத்தில் போலீசார் மீது கற்களை வீசி எறிந்தேன் என்றும் தன் தரப்பு நியாயத்தினை அப்ஷான் முன்வைத்துள்ளார்.

 

 

 

 






கருத்துரைகள்


கருத்துரைகள் இல்லை


 

தொடர்புடைய செய்திகள்