இந்தியா செய்திகள்

காஷ்மீரில் ராணுவ வீரர் துப்பாக்கியால் சுட்டு தற்கொலை

17 Feb 2017

ஸ்ரீநகர்- காஷ்மீரில் ராணுவ வீரர் ஒருவர் துப்பாக்கியால் சுட்டு தற்கொலை செய்து கொண்டார். காஷ்மீர் மாநிலம் சம்பா மாவட்டத்தில் ராணுவத்தில் ஹவில்தாராக பணியாற்றி வந்தவர் கிருஷ்ணன் சிங். 

அங்குள்ள மகேஸ்வர் ராணுவ முகாமில் பணியாற்றி வந்தார். ராஜஸ்தான் மாநிலத்தைச் சேர்ந்தவரான கிருஷ்ணன் சிங் கடந்த 1997ம் ஆண்டு ராணுவத்தில் சேர்ந்தார். 

இந்நிலையில், அவர் பணியில் இருந்த போது திடீரென துப்பாக்கி வெடிக்கும் சத்தம் கேட்டு சக வீரர்கள் விரைந்து சென்று பார்த்தனர். அங்கு கிருஷ்ணன் சிங் தன்னைத்தானே துப்பாக்கியால் சுட்டுக் கொண்டு ரத்த வெள்ளத்தில் இறந்து கிடப்பது தெரியவந்தது. 

இதுகுறித்து சம்பா போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர். இவர் தற்கொலை செய்து கொண்டாரா அல்லது யாரேனும் சுட்டு கொன்றனரா என்று விசாரணை நடத்தி வருகின்றனர். 

கிருஷ்ணன் சிங் மரணம் குறித்து ராணுவ துறை ரீதியாகவும் விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. 

இந்த சம்பவம் அங்கு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

 

 


கருத்துரைகள்


கருத்துரைகள் இல்லை


 

தொடர்புடைய செய்திகள்