உலகம் செய்திகள்

கால்பந்து போட்டியில் ரசிகர்கள் மோதல் மைதானம் இடிந்து 8 பேர் உயிரிழப்பு

16 Jul 2017

ஆப்பிரிக்கா நாடான செனேகல் தலைநகரான டாகரில் கால்பந்து இறுதி போட்டி நடந்தது. இப்போட்டி டெம்பா டியோப் என்ற கால்பந்து மைதானத்தில் நடைபெற்றது. உள்ளூர் அணிகள் பங்கு பெற்ற இந்த போட்டியை காண ஏராளமான ரசிகர்கள் திரண்டனர். போட்டிகளைக் கட்டியது. ரசிகர்கள் ஆட்டம் பாட்டம் கொண்டாட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது இரு அணி ரசிகர்களுக்கும் இடையே மோதல் ஏற்பட்டது. அப்போது ஒருவரை யருவர் தாக்கி கொண்டனர். அவர்களை அடக்க போலீசார் கண்ணீர் புகை குண்டுகளை வீசினர்.

இதனால் போட்டியை கான வந்த ரசிகர்கள் மைதானத்தை விட்டு வெளியேறினர். அனைவரும் ஒரே நேரத்தில் வெளியே செல்ல முயன்றதால் கூட்ட நெரிசல் ஏற்பட்டது. அப்போது மைதானத்தின் சுவர் இடிந்து ரசிகர்கள் மீது விழுந்து அமுக்கியது. இச்சம்பவத்தில் 8 பேர் உடல் நசுங்கி அதே இடத்தில் பலியாகினர். 49 பேர் காயம் அடைந்தனர். ஆம்புலன்ஸ்கள் மற்றும் தீயணைப்பு வண்டிகள் வரவழைக்கப்பட்டன. காயம் அடைந்த அனைவரும் மீட்கப்பட்டு ஆஸ்பத்திரிகளில் சேர்க்கப்பட்டனர். அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

 






கருத்துரைகள்


கருத்துரைகள் இல்லை


 

தொடர்புடைய செய்திகள்