இந்தியா செய்திகள்

கார்த்தி சிதம்பரத்தின் சொத்து முடக்கம்

26 Sep 2017

ஏர்செல்-மேக்சிஸ் ஒப்பந்தம் செய்து கொள்ளப்பட்டதில் பணமோசடி நடந்ததாக கூறி சி.பி.ஐ.யும், அமலாக்கத்துறையும் விசாரணை நடத்தி வருகின்றன. இந்த வழக்கில் முன்னாள் மத்திய நிதி மந்திரி ப.சிதம்பரத்தின் மகன் கார்த்தி சிதம்பரம் மற்றும் ஒரு நிறுவனம் மீது குற்றம் சாட்டப்பட்டு இருக்கிறது.

கார்த்தி சிதம்பரம் தனது தந்தை ப.சிதம்பரம் மத்திய நிதி மந்திரியாக இருந்தபோது, ஏர்செல்-மேக்சிஸ் நிறுவனத்திடம் இருந்து அன்னிய முதலீட்டை பெற்றபோது பண மோசடியில் ஈடுபட்டதாக அமலாக்கத்துறை குற்றம் சாட்டி உள்ளது.

இந்தநிலையில், நிதிமுறைகேடு தொடர்பாக கார்த்தி சிதம்பரம் மற்றும் ஒரு நிறுவனத்தின் வங்கி கணக்குகளில் உள்ள ரூ.1 கோடியே 16 லட்சம் மதிப்புள்ள சொத்துகளை அமலாக்கத்துறை நேற்று முடக்கி வைத்தது.

இதில் அவர் நிரந்தர வைப்புத் தொகையில் வைத்துள்ள ரூ.90 லட்சமும் அடங்கும்.

சொத்துகளை விற்று சில வங்கிக் கணக்குகளை மூடும் நடவடிக்கையில் கார்த்தி சிதம்பரம் ஈடுபட்டதால் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டு இருப்பதாக அமலாக்கத்துறை தெரிவித்து உள்ளது.

இதுபற்றி ப.சிதம்பரம் கூறுகையில் “எனது மகன் மற்றும் ஒரு நிறுவனத்தின் மீது எடுக்கப்பட்டுள்ள இந்த நடவடிக்கை யூகத்தின் அடிப்படையிலான கோமாளித்தன கலவைகளை கொண்டது. என்னை மிரட்டும் நோக்கத்துடனும், எனது குரலை ஒடுக்க நினைத்தும் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு உள்ளது. இதற்கெல்லாம் பயப்பட மாட்டேன். முடக்கத்திற்கான உத்தரவு வழங்கப்பட்டதும், இதில் சட்டப்படி உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்படும்” என்றார்.

 

 

 

 

 

 


கருத்துரைகள்


கருத்துரைகள் இல்லை


 

தொடர்புடைய செய்திகள்

Inayam TV