இந்தியா செய்திகள்

காரை தூக்கி வீசிய வர்தா புயல்!

12 Dec 2016

வர்தா புயல் சென்னையை கடந்த போது சூறாவளியின் காற்று வீட்டின் ஓரத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த காரை தூக்கி வீசியுள்ளது. 

இதன்போது வரலாறு காணாத அளவில் சுமார் 192 கி.மீ. வேகத்தில் காற்று வீசியது. 

சென்னையை மிரட்டி வரும் வர்தா புயலின் மையப்பகுதி, தற்போது சென்னையை கடந்து கொண்டிருக்கிறது. 

வர்தா கடக்க துவங்கிய போது சுமார் 120 கி.மீ., முதல் 130 கி.மீ. வேகத்தில் காற்று வீசியது. 

இது அவ்வப்போது 140 கி.மீ., வேகத்தை எட்டியதாக தெரிவிக்கப்பட்ட நிலையில், தற்போது அதன் மையப்பகுதி சென்னையில் இருந்து 10 கி.மீ தொலைவில், கரையை கடக்க துவங்கியுள்ளது. 

ஆனால், முன்னதாக வீசிய சூறாவளி காற்று, இதுவரை வரலாறு காணாத அளவில், மணிக்கு 192 கி.மீ., வேகத்தில் வீசியது.

 

 

 


கருத்துரைகள்


கருத்துரைகள் இல்லை


 

தொடர்புடைய செய்திகள்