விளையாட்டு செய்திகள்

காயம் காரணமாக முரளி விஜய் விலகல், ஷிகர் தவான் சேர்ப்பு

17 Jul 2017

இந்திய கிரிக்கெட் அணி அடுத்து இலங்கைக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 டெஸ்ட், 5 ஒரு நாள் போட்டி மற்றும் ஒரு 20 ஓவர் போட்டியில் விளையாடுகிறது. இந்தியா–இலங்கை அணிகள் இடையிலான முதலாவது டெஸ்ட் போட்டி காலேயில் வருகிற 26–ந்தேதி தொடங்குகிறது.

இந்த டெஸ்ட் தொடருக்கான இந்திய அணி அண்மையில் அறிவிக்கப்பட்டது.  இந்த நிலையில், துவக்க ஆட்டக்காரர் முரளி விஜய் காயம் காரணமாக விலகியுள்லார்.  ஆஸ்திரேலிய தொடரின் போது  மணிக்கட்டில் ஏற்பட்ட காயம் குணம் அடையாததால் அணியில் இருந்து அவர் விலகியுள்ளார். முரளி விஜய்க்கு பதிலாக வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான தொடரில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய ஷிகர் தவான் அணியில் மீண்டும் இடம் பிடித்துள்ளார்.

16 பேர் கொண்ட இந்திய அணி வருமாறு:– விராட் கோலி (கேப்டன்), ஷிகர் தவான், லோகேஷ் ராகுல், புஜாரா, ரஹானே (துணை கேப்டன்), ரோகித் சர்மா, அஸ்வின், ரவீந்திர ஜடேஜா, விருத்திமான் சஹா, இஷாந்த் ‌ஷர்மா, உமேஷ் யாதவ், ஹர்திக் பாண்ட்யா, புவனேஷ்வர்குமார், முகமது ‌ஷமி, குல்தீப் யாதவ், அபினவ் முகுந்த்.


கருத்துரைகள்


கருத்துரைகள் இல்லை


 

தொடர்புடைய செய்திகள்