இலங்கை செய்திகள்

காயங்களுடன் மீட்கப்பட்ட முதிய பெண்ணின் சடலம்

24 Jun 2022

காங்கேசன்துறை – கொல்லங்கலட்டியில்   தனிமையில் வாழ்ந்த 78 வயது பெண் கழுத்தில் வெட்டுக்காயங்களுடன் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

அப் பெண் அணிந்திருந்த நகைகள் காணப்பட்ட நிலையில், கொலைக்கான காரணம் கண்டறியப்படவில்லை என்று காங்கேசன்துறை பொலிஸார் தெரிவித்தனர்.

இன்று காலை பெண்ணின் வீட்டு வளாகத்திலுள்ள தோட்டத்திற்கு தண்ணீர் இறைப்பதற்கு சென்ற உறவினர் ஒருவர் பெண் குருதிக் காயங்களுடன் சடலமாக காணப்பட்டதை அறிந்து காங்கேசன்துறை பொலிஸாருக்கு தகவல் வழங்கியுள்ளார்.

சாணை தவமணி  என்ற குறித்த பெண்ணின் மரணம் தொடர்பில் காங்கேசன்துறை பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.


கருத்துரைகள்


கருத்துரைகள் இல்லை


 

தொடர்புடைய செய்திகள்


Powered by Jasper Roberts - Inayam