கனடா செய்திகள்

காணாமல் போன முதியவர், 2 பேரப்பிள்ளைகள் பாதுகாப்பாக மீட்பு

11 Jul 2019

காணாமல் போன இரண்டு சிறுவர்கள் தாத்தாவுடன் பாதுகாப்பாக காணப்பட்டதை அடுத்து அம்பர் எச்சரிக்கை ரத்து செய்யப்பட்டுள்ளது.

இன்று (துரடல11)வியாழக்கிழமை அதிகாலை 4:30 மணியளவில் எட்டோபிகோவில் போக்குவரத்து நிறுத்தம் ஒன்றில் மூவரும் கண்டுபிடிக்கப்பட்டதாக போலீசார் தெரிவித்தனர். மூவரும் நல்ல ஆரோக்கியத்துடன் உள்ளனர்.

70 வயதான தாத்தாஇ தன்னுடன் இரண்டு மற்றும் நான்கு வயது குழந்தைகளை வேனில் வைத்திருந்தார்இ நியூமார்க்கெட்டில் உள்ள டேவிஸ் டிரைவில் உள்ள சவுத்லேக் பிராந்திய சுகாதார மையத்திலிருந்து தெருவுக்கு குறுக்கே உள்ள ஒரு பிளாசாவில்  தனது மனைவியை இறக்கிவிட்ட பின்பு அப்பகுதியிலிருந்து அவர் சென்றார்.


இது குழந்தை கடத்தல் வழக்கு அல்ல என்று போலீசார் தெரிவித்தனர். அதற்கு பதிலாக, அவர்கள் தாத்தாவின் மருத்துவ நிலை மற்றும் குழந்தைகளின் பாதுகாப்பு குறித்து குடும்பத்தினர் எல்லோரும் கவலை கொண்டிருந்தினர்.


கருத்துரைகள்


கருத்துரைகள் இல்லை


 

தொடர்புடைய செய்திகள்