இலங்கை செய்திகள்

காணாமலாக்கப்பட்டோர் மரணிக்கவில்லை என மஹிந்த அணி தெரிவிப்பு

11 Sep 2019

காணாமலாக்கப்பட்டோர் மரணிக்கவில்லை என மஹிந்த அணி தெரிவித்துள்ளது.

கொழும்பில் நேற்று செவ்வாய்கிழமை இடம்பெற்ற ஊடகவியலாளர்கள் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து வெளியிடும் போதே நாடாளுமன்ற உறுப்பினர் சிசிர ஜயகொடி இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

இதன்போது அங்கு தொடர்ந்தும் கருத்து வெளியிட்ட அவர், ‘காணாமலாக்கபட்டோர் என்று குறிப்பிடுபவர்கள் உண்மையில் காணாமலாக்கப்படவும், மரணிக்கவும் இல்லை.

காணமலாக்கப்பட்டோர் அலுவலகம் அரசியல் தேவைகளுக்காகவே உருவாக்கப்பட்டது என்று ஆரம்பத்தில் இருந்து குறிப்பிட்டோம்.

பாதிக்கப்பட்ட மக்களுக்கு உண்மையாக தீர்வு கிடைக்க வேண்டும் என்ற நோக்கத்தில் எவ்வித செயற்பாடுகளும் முன்னெடுக்கப்படவில்லை.

தேர்தல் இடம் பெறவுள்ள தருணத்தில் வடக்கு மக்களின் ஆதரவை பெறும் நோக்கில் அரசாங்கம் காணாமலாக்கப்பட்டோரது உறவுகளுக்கு மாதம் ஆறாயிரம் ரூபாயினை வழங்கவுள்ளமை பொருத்தமற்றதாகும்” எனத் தெரிவித்துள்ளார்.


கருத்துரைகள்


கருத்துரைகள் இல்லை


 

தொடர்புடைய செய்திகள்