கனடா செய்திகள்

காட்டுத் தீயுடன் போராடும் தீயணைப்பு வீரர்கள்

11 Jul 2017

பிரிட்டிஷ் கொலம்பியாவில் இன்னமும் காட்டுத்தீ எரிந்துகொண்டிருக்கின்ற நிலையில் தொடர்ச்சியாக போராடிக் கொண்டிருக்கும் தீயணைப்பு வீரர்களுக்கு உதவும் வகையில் ஒன்ராறியோ தீயணைப்பு வீரர்கள் அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்.

நேற்று திங்கட்கிழமை மாலை வரை 215இற்கும் மேற்பட்ட இடங்களில் காட்டுத்தீ ஏற்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். கடந்த வெள்ளிக்கிழமை எரிய ஆரம்பித்த காட்டுத்தீ சூடான வறண்ட காலநிலை மற்றும் அதிக காற்று காரணமாக தொடர்ச்சியாக ஏனைய இடங்களுக்கும் பரவி வருகின்றது.  இதன் காரணமாக இதுவரை 14 ஆயிரம் பொதுமக்கள் வீடுகளைவிட்டு வெளியேற்றப்பட்டுள்ளனர்.

இந்நிலையில் தீவிரமாக பரவும் காட்டுத்தீயுடன் போராடும் பிரிட்டிஷ் கொலம்பிய தீயணைப்பு வீரர்களுக்கு உதவும் வகையில் இன்று செவ்வாய்க்கிழமை 105 ஒன்ராறியோ தீயணைப்பு வீரர்கள் அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்.

அதேவேளை நியூபிறவுன்ஸ்விக், அல்பேட்டா, மற்றும் சஸ்கற்சுவான் பகுதிகளைச் சேர்ந்த தீயணைப்பு வீரர்கள் மற்றும் உதவியாளர்களும் இணைந்துள்ளனர்.


கருத்துரைகள்


கருத்துரைகள் இல்லை


 

தொடர்புடைய செய்திகள்