கனடா செய்திகள்

காட்டுத் தீயால் பிரிட்டிஷ் கொலம்பியாவில் அவசரகால நிலை

10 Jul 2017

பிரிட்டிஷ் கொலம்பியாவில் தொடர்ந்து பரவிவரும் காட்டுத்தீயினால் அங்கு மாநிலம் தழுவிய அளவில் அவசரகால நிலை அறிவிக்கப்பட்டுள்ளது.

மக்களின் பாதுகாப்பினை உறுதிப்படுத்தும் வகையில் மேற்கொள்ளப்படும் நடவடிக்கைகளை ஒருங்கிணைத்து முன்னெடுப்பதற்கு அவசரகால நிலையினை அறிவிக்கவேண்டிய தேவை ஏற்பட்டுள்ளதாக மாநில போக்குவரத்து அமைச்சர் தெரிவித்துள்ளார்.

தற்போது நிலவும் வெப்பமான மற்றும் வறட்சியான காலநிலை காரணமாக, இந்த காட்டுத் தீ நிலவரம் எதிர்வரும் நாட்களில் இன்னமும் தீவிரமடையக் கூடும் என்று எதிர்பார்க்கப்படுவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

பிரிட்டிஷ் கொலம்பியாவில் கடந்த 2003ஆம் ஆண்டு ஏற்பட்ட காட்டுத்தீ காரணமாக அவசரகால நிலைமை அறிவிக்கப்பட்டமைக்கு பிறகு தற்போதே அங்கு அவசரகால நிலைமை அறிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.


கருத்துரைகள்


கருத்துரைகள் இல்லை


 

தொடர்புடைய செய்திகள்