இலங்கை செய்திகள்

காஞ்சிராம்குடா படுகொலை நினைவேந்தல்

10 Oct 2018

அம்பாறை -திருக்கோவில் பிரதேசத்தில் இராணுவத்தினரின் துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்காகி உயிரிழந்த மாணவர்கள் உட்பட ஏழு பேரின் 16ஆவது ஆண்டு நினைவேந்தல் நேற்று செவ்வாய்க்கிழமை மாலை நடைபெற்றது. தாய்மார்கள் தங்களின் பிள்ளைகளின் உருவப்படங்களுக்கு மலர்மாலை அணிவித்து விளக்கேற்றி கண்ணீரோடு அனுஷ்டித்தனர்.

குறித்த  நினைவேந்தல் அனுஷ்டிப்பானது அம்பாறை மாவட்ட காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகளின் சங்கத் தலைவி தம்பிராசா செல்வராணியின் தலைமையில் திருக்கோவில்  சுப்பர்ஸ்டார் விளையாட்டுத் திடலுக்கு அருகாமையில் அமைந்துள்ள நினைவுத் தூபியில் இடம்பெற்றது.

இதே வேளை, படுகொலை செய்யப்பட்ட முன்னாள் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் அரிநாயகம் சந்திரநேருவின் உருவப்படத்திற்கு அவரது மனைவி மலர்மாலை அணிவித்து தீபச் சுடர் ஏற்றினார்.

கடந்த 2002ஆம் ஆண்டு ஒக்டோர் மாதம் 09 திகதி மாலை சமாதான காலத்தில் காஞ்சிராம்குடா இராணுவ முகாமினை நோக்கி இடம்பெற்ற ஒரு ஆர்ப்பாட்டத்தின் போது படையினரின் துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்காகி மாணவர்கள் உட்பட ஏழு பேர் உயிரிழந்தமை குறிப்பிடத்தக்கது.

 

 






கருத்துரைகள்


கருத்துரைகள் இல்லை


 

தொடர்புடைய செய்திகள்