சினிமா செய்திகள்

காசிக்கு செல்கிறாரா ரஜினி?

11 Jul 2018

கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் ரஜினி நடிக்கும் படத்தின் முதல்கட்ட படப்பிடிப்பு முடிந்த நிலையில் அடுத்த கட்ட படப்பிடிப்பு டேராடூனில் அடுத்த வாரம் தொடங்க இருக்கிறது.

அது முடிந்த பின்னர் அடுத்து மதுரைக்கு செல்வார்கள் என்று செய்திகள் வந்த நிலையில் அந்த திட்டம் மாறி இருக்கிறது. அடுத்த மாத இறுதியில் காசி நகரில் படப்பிடிப்புக்காக செல்ல இருக்கிறார்கள்.

20 நாட்கள் தொடர்ந்து அங்கே படப்பிடிப்பு நடத்த திட்டமிட்டு இருப்பதாக தகவல் வருகிறது. இந்நிலையில் ரஜினி நடிப்பில் சங்கர் இயக்கத்தில் உருவாகும் 2.0 படம் நவம்பர் 29 ம் தேதி வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த அறிவிப்பை வெளியிட்டிருக்கும் சங்கர், ‘கிராபிக்ஸ் நிறுவனங்கள் இறுதியாக பணி எப்போது முடியும் என்று கூறிவிட்டார்கள். எனவே படம் நவம்பர் 29 ம் தேதி வெளியாகும்’ என்று அறிவித்து இருக்கிறார். அது மழைக்காலம் ஆயிற்றே என்ற வருத்தம் இருந்தாலும் ரஜினி பிறந்தநாளை ஒட்டி படம் வெளியாவதால் உற்சாகத்தில் இருக்கிறார்கள் ரசிகர்கள்.

 

 

 


கருத்துரைகள்


கருத்துரைகள் இல்லை


 

தொடர்புடைய செய்திகள்