இந்தியா செய்திகள்

காங்கிரஸ் கட்சியின் 2 நாள் ஆலோசனை கூட்டம்; டெல்லியில் இன்று தொடங்குகிறது

26 May 2023

ராஜஸ்தான், மத்திய பிரதேசம், சத்தீஸ்கார், தெலுங்கானா, மிசோரம் ஆகிய 5 மாநிலங்களுக்கு இந்த ஆண்டு தேர்தல் நடைபெறுகிறது. இந்த தேர்தலை எதிர்கொள்வதற்கு காங்கிரஸ் கட்சி தயாராகி வருகிறது.

இதில் முதற்கட்டமாக மத்திய பிரதேசம், ராஜஸ்தான், சத்தீஸ்கார் ஆகிய 3 மாநில தேர்தலில் வகுக்க வேண்டிய வியூகங்கள் குறித்து ஆலோசனை நடத்துவதற்காக 2 நாள் கூட்டம் டெல்லியில் இன்று (வெள்ளிக்கிழமை) தொடங்குகிறது. இதில் காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே மற்றும் மூத்த தலைவர்கள் கலந்து கொள்கிறார்கள்.

3 மாநில காங்கிரஸ் நிர்வாகிகளுடன் கட்சியின் தேசிய நிர்வாகிகள் தனித்தனியாக ஆலோசனை நடத்துகின்றனர். இதில் இன்று மத்திய பிரதேசம், ராஜஸ்தான் தேர்தல் தொடர்பாகவும், நாளை சத்தீஸ்கார் தேர்தல் குறித்தும் ஆலோசனை நடத்தப்படுகிறது.

சமீபத்தில் நடந்த கர்நாடக தேர்தலில் கிடைத்த அபார வெற்றியால் மகிழ்ச்சியில் இருக்கும் காங்கிரசார், அதே வெற்றியை இந்த மாநிலங்களிலும் தொடர்வதற்கு தீவிர நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர். அந்த அடிப்படையில் இந்த கூட்டங்களில் ஆலோசனை நடத்தப்படும் என கட்சி வட்டாரங்கள் தெரிவித்தன.


கருத்துரைகள்


கருத்துரைகள் இல்லை


 

தொடர்புடைய செய்திகள்


Powered by Jasper Roberts - Inayam