உலகம் செய்திகள்

கவுதமாலா இஸ்ரேலுக்கான தனது தூதரகத்தினை ஜெருசலேமில் திறந்தது

16 May 2018

 

அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் டெல் அவிவ் நகரில் இருந்த இஸ்ரேலுக்கான அமெரிக்க தூதரகத்தினை ஜெருசலேம் நகருக்கு கடந்த திங்கட்கிழமை முன் இடமாற்றினார்.

இதற்கு பாலஸ்தீனர்கள் மத்தியில் கடும் கண்டனம் தெரிவிக்கப்பட்டது.  தொடர்ந்து இஸ்ரேலுக்கு எதிராக காசா எல்லையை நோக்கி அவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.  அவர்களை கட்டுப்படுத்த இஸ்ரேல் படைகள் துப்பாக்கி சூடு நடத்தின.

இந்த சம்பவத்தில் 59 பாலஸ்தீனியர்கள் கொல்லப்பட்டனர்.  2,400 பேர் காயமடைந்தனர்.

இந்நிலையில், அமெரிக்காவை தொடர்ந்து கவுதமாலா நாடும் இஸ்ரேலுக்கான தனது தூதரகத்தினை ஜெருசலேம் நகரில் திறந்துள்ளது.

இதற்கான தொடக்க நிகழ்சிசியில் இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நேதன்யாஹு மற்றும் கவுதமாலா அதிபர் ஜிம்மி மொரேல்ஸ் மற்றும் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.  மத்திய அமெரிக்க நாடான கவுதமாலாவின் இந்த முடிவை புகழ்ந்து பேசிய பெஞ்சமின் நேதன்யாஹு, தனது அடுத்த பயணம் கவுதமாலா நாட்டில் இருக்கும் என்று கூறினார்.


கருத்துரைகள்


கருத்துரைகள் இல்லை


 

தொடர்புடைய செய்திகள்