இலங்கை செய்திகள்

களுவாஞ்சிக்குடியில் முன்னாள் போராளி ஒருவர் தற்கொலை

06 Dec 2018

மட்டக்களப்பு – களுவாஞ்சிக்குடி பொலிஸ் பிரிவில் விடுதலைப் புலிகளின் இயக்கத்தைச் சேர்ந்த முன்னாள் போராளியொருவர் தற்கொலை செய்து கொண்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

தேற்றாத்தீவு களுதாவளை தெற்கு எல்லை வீதியில் வசித்து வந்த 45 வயதுடைய ஐந்து பிள்ளைகளின் தந்தையான வைரமுத்து திசவீரசிங்கம் என்பவரே நேற்று புதன்கிழமை .அவரது வீட்டில் தற்கொலை செய்துகொண்டுள்ளார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

இவர் ஏற்கனவே தற்கொலைக்கு முயற்சித்த நிலையில் காப்பாற்றப்பட்டிருந்தார் என்று உறவினர்கள் தெரிவித்துள்ளனர்.

யுத்த காலத்தில் தாக்குதல் சம்பவங்களின்போது இவரது உடலில் உள்நுழைந்த ஆயுதப் பொருட்களின் துகள்கள் தொடர்ந்து அகற்றப்படாமல் இருந்ததால் இவர் அடிக்கடி வலிப்பு உபாதைக்கு உள்ளாகி வந்ததாகவும் உறவினர்கள் தெரிவித்தனர். இச்சம்பவம் குறித்து  களுவாஞ்சிக்குடி பொலிஸார் விசாரணைகளில் ஈடுபட்டுள்ளனர்.


கருத்துரைகள்


கருத்துரைகள் இல்லை


 

தொடர்புடைய செய்திகள்