இலங்கை செய்திகள்

களனி பல்கலைக்கழக மாணவி மீது தாக்குதல்

13 Jun 2019

களனி பல்கலைக்கழகத்தின் அருகில் இன்று காலை இடம்பெற்ற தாக்குதலில் பல்கலைக்கழக மாணவி ஒருவர் காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். 

றாகம வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ள குறித்த மாணவி ஆபத்தான நிலையில் இல்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. 

சம்பவம் தொடர்பில் மாணவியின் காதலனான 22 வயதுடைய இளைஞர் கிரிபத்கொட பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடக பேச்சாளர் தெரிவித்துள்ளார்.  சம்பவம் தொடர்பில் கிரிபத்கொட பொலிஸார் மேலதிக விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.


கருத்துரைகள்


கருத்துரைகள் இல்லை


 

தொடர்புடைய செய்திகள்