இலங்கை செய்திகள்

கல்கிஸ்ஸ கல்டெமுல்ல பிரதேசத்தில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் உயிரிழப்பு

06 Dec 2018

கல்கிஸ்ஸ கல்டெமுல்ல பிரதேசத்தில் நேற்று இரவு இனம்தெரியாத நபர்கள் நடத்திய துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தில் ஒருவர் உயிரிழந்தார். 

சுமார் 30 வயது மதிக்கத்தக்க ஒருவரே துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தில் உயிரிழந்ததாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அலுவலகம் கூறியுள்ளது. 

துப்பாக்கிச் சூட்டில் படுகாயமடைந்த நபர் களுபோவில வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் உயிரிழந்தார்.  மோட்டார் சைக்கிளில் வந்த இனந்தெரியாத இரண்டு பேர் துப்பாக்கிச் சூட்டை நடத்தியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.  சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை பொலிஸார் ஆரம்பித்துள்ளனர்.


கருத்துரைகள்


கருத்துரைகள் இல்லை


 

தொடர்புடைய செய்திகள்