சினிமா செய்திகள்

கர்ணன் வேடத்துக்காக பயிற்சி எடுக்கும் விக்ரம்

06 Dec 2018

மலையாளத்தில், ‘என்னு நிண்டே மொய்தீன்’ எனும் படத்தை இயக்கிய ஆர்.எஸ்.விமல் 300 கோடி ரூபாய் பட்ஜெட்டில் பிரமாண்டமாக இயக்கும் படம் ‘மகாவீர் கர்ணா’. மகாபாரதத்தில் இடம் பெற்றுள்ள கர்ணன் கதாபாத்திரத்தை மையமாகக் கொண்டு உருவாகும் இந்தப் படத்தில் விக்ரம் கர்ணனாக நடிக்கிறார்.

இந்தப் படத்தின் படப்பிடிப்புக்காக கேரளாவில் உள்ள ஸ்ரீ பத்மநாபர் கோயிலில் உள்ள மணி ஒன்றைப் படக்குழுவினர் பெற்றுள்ளனர். படத்துக்காக உருவாக்கப்பட உள்ள 30 அடி உயரமுள்ள கர்ணனின் ரதத்தில் இந்தக் கோயில் மணி இடம்பெற உள்ளது.

ஐதராபாத், ஜெய்ப்பூர் மற்றும் கனடாவில் இந்தப் படத்தின் முக்கியக் காட்சிகள் படமாக்கப்பட உள்ளன. தமிழ், மலையாளம், இந்தி ஆகிய மொழிகளில் ரிலீசாக இருக்கும் இந்தப் படம் 32 மொழிகளில் டப் செய்யப்படுகிறது. இந்த படத்துக்காக தனது உடல் எடையை ஏற்றி ஆஜானு பாகுவான தோற்றத்துக்கு மாறி இருக்கும் விக்ரம், குதிரையேற்ற பயிற்சிகளும் எடுத்து வருகிறார். 


கருத்துரைகள்


கருத்துரைகள் இல்லை


 

தொடர்புடைய செய்திகள்