இலங்கை செய்திகள்

கரையொதுங்கிய  கஞ்சாப் பொதிகள் மீட்பு

23 Sep 2022

யாழ்ப்பாணம்- பருத்தித்துறை சக்கோட்டை கடற்கரைப் பகுதியில் கரையொதுங்கிய  கஞ்சா பொதிகள் மீட்கப்பட்டுள்ளன.

பருத்தித்துறை சக்கோட்டை பகுதியில் கேரள கஞ்சா கடத்தல் தொடர்பில் கிடைத்த தகவலையடுத்து இன்று அதிகாலை அங்கு சென்ற இராணுவத்தினர் ,கரையொதுங்கிய நிலையில் இருந்த 42 கிலோகிராம் கேரள கஞ்சா பொதிகளை மீட்டனர். இவ்வாறு மீட்கபட்டவை மதுவரித் திணைக்களத்தினரிடம் கையளிக்கப்பட்டுள்ளது.

கைப்பற்றப்பட்ட கேரள கஞ்சா பொதிகளை மதுவரித் திணைக்களத்தினர் பருத்தித்துறை நீதிமன்றில் ஒப்படைக்க நடவடிக்கை எடுத்துள்ளனர்.


கருத்துரைகள்


கருத்துரைகள் இல்லை


 

தொடர்புடைய செய்திகள்


Powered by Jasper Roberts - Inayam