கனடா செய்திகள்

கனேடிய முன்னாள் நிதி அமைச்சர் மைக்கல் வில்சன் காலமானார்

11 Feb 2019

கனேடிய முன்னாள் நிதி அமைச்சரும், அமெரிக்காவிற்கான முன்னாள் கனேடிய தூதுவருமான மைக்கல் வில்சன் காலமானார்.

2012 முதல் 2018ஆம் ஆண்டுவரை வில்சன் வேந்தராக பணியாற்றிய ரொறன்ரோ பல்கலைக்கழகம் அவரது மறைவை நேற்று ஞாயிற்றுக்கிழமை உறுதிபடுத்தியுள்ளது.

வில்சன் கடந்த ஒரு தசாப்த காலத்திற்கு மேலாக ரொறன்ரோவின் நாடாளுமன்ற உறுப்பினராக சேவையாற்றியுள்ளார்.

முன்னாள் பிரதமர் பிரையன் முல்ரோனி ஆட்சிக் காலத்தில் இவர், நிதி அமைச்சராகவும், சர்வதேச வர்த்தக அமைச்சராகவும் பணியாற்றியுள்ளார். அதனை தொடர்ந்து 2006ஆம் ஆண்டு மார்ச் மாதம் முதல் 2009 ஒக்டோபர் மாதம் வரை அமெரிக்காவிற்கான கனேடிய தூதுவராகவும் சேவையாற்றியுள்ளார்.

அவரது மகன் 1995ஆம் தற்கொலை செய்துக் கொண்டதை தொடர்ந்து வில்சன் மனநல ஆர்வலராகவும் செயற்பட்டு வந்தமை குறிப்பிடத்தக்கது.


கருத்துரைகள்


கருத்துரைகள் இல்லை


 

தொடர்புடைய செய்திகள்