கனடா செய்திகள்

கனேடிய எண்ணெய் மற்றும் எரிவாயுவை இந்தியாவுக்கு கொண்டு செல்வது குறித்து யோசனை

10 Oct 2018

எரிபொருள் தேவையை பூர்த்தி செய்வதற்கு கனேடிய எண்ணெய் மற்றும் எரிவாயுவை இந்தியாவுக்கு கொண்டு செல்வதற்கான வழிகளை கண்டறிய வேண்டி உள்ளதாக கனேடிய கொன்சவேற்றிவ் கட்சி தலைவரும் எதிர்க்கட்சி தலைவருமான அன்ட்ரூ ஷியர் தெரிவித்தார்.

இந்தியாவிற்கு உத்தியோகப்பூர்வ விஜயம் மேற்கொண்டுள்ள கனேடிய எதிர்க்கட்சி தலைவர், நேற்று செவ்வாய்க்கிழமை இந்திய பிரதமர் நரேந்திர மோடியை டெல்லியில் சந்தித்தார். குறித்த சந்திப்பின்போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

மேலும், எரிசக்தி துறையை அபிவிருத்தி செய்வதற்கும், சந்தையில் எண்ணெய் வளங்களை பெறுவதற்கும் தாம் மிகவும் தீவிரம் காட்டி வருவதாகவும் எதிர்க்கட்சி தலைவர் தெரிவித்தார்.

இதேவேளை, எண்ணெய் குழாய் விரிவாக்கத்திற்கான தடைகளை நீக்கி கனேடிய எண்ணெய் மற்றும் எரிவாயு புதிய சந்தைகளை எட்டுவதற்கு கொன்சவேற்றிவ் அரசாங்கம் நடவடிக்கை எடுக்கும் என்றும் குறிப்பிட்டார்.

பொருளாதார உறவுகளையும் இருநாட்டு வர்த்தகத்தையும் பலப்படுத்தும் நோக்கில் கனேடிய பிரதமரின் இந்திய விஜயம் அமைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.


கருத்துரைகள்


கருத்துரைகள் இல்லை


 

தொடர்புடைய செய்திகள்