உலகம் செய்திகள்

கனிமங்களை ஏற்றுமதி செய்யக் கூடாது – அதிபர் டுடர்டே

24 Jul 2017

தங்களது நாட்டில் வெட்டி எடுக்கப்படும் கனிமங்களை ஏற்றுமதி செய்வதை தடுத்து நிறுத்த வேண்டும் என்று பிலிப்பன்ஸ் அதிபர் டுடர்டே விருப்பம் தெரிவித்துள்ளார்.

அவற்றை ஏற்றுமதி செய்யாமல் உள்ளூரிலேயே பயன்படுத்த வேண்டும் என்றார் அவர்.

தனது நாட்டு மக்களிடையே உரையாற்றிய அவர் கனிம சுரங்கங்களால் பாழான பகுதிகளின் மறுவாழ்விற்கு கனிம நிறுவனங்களையே பொறுப்பேற்க செய்யப் போவதாகவும் தெரிவித்தார்.

கடந்த வெள்ளியன்று பேசுகையில் டுடெர்டே நாட்டில் கனிமத் தொழிலிற்கு புதிய சட்டம் ஒன்றை அரசு வகுக்கும் என்ற அவர் கனிம நிறுவனங்கள் சிறிதளவே வரி செலுத்தி விட்டு அவர்கள் நாசமாக்கும் சுற்றுச்சூழலுக்கு எதிராக நஷ்ட ஈடு எதையும் கொடுப்பதில்லை என்பதையும் சுட்டிக்காட்டினார்.

 

 

 

 

 

 

 

 


கருத்துரைகள்


கருத்துரைகள் இல்லை


 

தொடர்புடைய செய்திகள்

Inayam TV