கனடா செய்திகள்

கனடிய சிறுமியை துன்புறுத்திய நபருக்கு 32 ஆண்டுகள் சிறை

15 Sep 2023

கனடிய சிறுமியை பாலியல் ரீதியாக துன்புறுத்திய நபர் ஒருவருக்கு 32 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

கனடாவின் பிரிட்டிஷ் கொலம்பிய மாகாணத்தின் சர்ரே பகுதியைச் சேர்ந்த 12 வயது சிறுமி ஒருவர் உள்ளிட்ட பல சிறுமிகளை பாலியல் ரீதியாக துன்புறுத்திய நபர் ஒருவருக்கு பிரித்தானிய நீதிமன்றம் 32 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்துள்ளது.

கெவின் பிரக் என்ற 29 வயதான பிரித்தானியாவின் கேம்பிரிட்ஜ் நகர பிரஜை ஒருவருக்கு இவ்வாறு தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

இந்த ஆண்டு பெப்ரவரி மாதம் குறித்த நபரை பிரித்தானிய பொலிசார் கைது செய்திருந்தனர்.குறித்த நபருக்கு எதிராக பாலியல் துஷ்பியோகம், ஆபாச படங்களை வைத்திருந்தமை, இணைய வழியில் பாலியல் சீண்டல்கள் செய்தமை உள்ளிட்ட பல்வேறு குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டிருந்தன.

இந்த குற்றச்சாட்டுக்கள் தொடர்பில் நீண்ட விசாரணை மேற்கொண்ட பிரித்தானிய நீதிமன்றம் குறித்த நபருக்கு இவ்வாறு 32 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்துள்ளது.


கருத்துரைகள்


கருத்துரைகள் இல்லை


 

தொடர்புடைய செய்திகள்


Powered by Jasper Roberts - Inayam