கனடா செய்திகள்

கனடியப் பிரதமரை மீண்டும் சாடியுள்ள ட்ரம்ப்

13 Jun 2018

அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் கனடாவையும் பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோவையும் மீண்டும் தாக்கி கருத்து வெளியிட்டுள்ளார்.

கியூபெக்கில் நடைபெற்ற ஜி-7 மாநாட்டுக்காக கனடா வந்திருந்த டொனால்ட் ட்ரம்ப், மாநாட்டின் முடிவில் வெளியிடுவதற்கு தயாரிக்கப்பட்ட கூட்டு அறிக்கைக்கு முதலில் ஒப்புதல் வழங்கியதுடன், பின்னர் அந்த ஒப்புதலை திரும்பப் பெற்றார்.

தன்னால் விதிக்கப்பட்ட வர்த்தக வரி தொடர்பில் கனடிய பிரதமர் கண்மூடித்தனமாக கருத்துக்களை வெளியிட்டதாக குற்றஞ்சாடடியே அவர் அவ்வாறு செய்துக்கொண்டார்.
 அத்துடன் கனடிய பிரதமரை கடுமையாக சாடியிருந்த அவர், சனிக்கிழமை கனடாவில் இருந்து சிங்கப்பூருக்கு புறப்பட்டுச் சென்றார்.

இந்த நிலையில்  மீண்டும் தனது ட்விட்டர் பதிவு மூலமாக கனடாவையும், கனடிய பிரதமரையும் சாடும் வகையில் கருத்து வெளியிட்டு்ளளார்.

கனடிய பிரதமர் பலமற்றவர் எனவும், நேர்மை அற்றவர் என்றும் தெரிவித்துள்ள டொனால்ட் ட்ரம்ப், வர்த்தகத்தில் பரஸ்பர நடவடிக்கைகள் இல்லாவிட்டால் அதனை நீதியான வர்த்தகம் என்பதற்கு பதிலாக முட்டாள்தனமான வர்த்தகம் என்று அழைக்கலாம் என்று தெரிவித்துள்ளார்.

இவ்வாறான நிலையில் ட்ரம்பின் இந்தப் பதிவு குறித்து கருத்து வெளியிட்டுள்ள யேர்மனியின் ஆட்சித் தலைவர் ஏஞ்செலா மார்க்கெல், ட்ரம்பின் இந்த பதிவானது, G7 அறிக்கையைத் தட்டிக்கழிக்கும் வகையில் உள்ளது என்று கூறியுள்ளார்.

அத்துடன் அமெரிக்காவின் இந்த வர்த்தக வரி நடவடிக்கைகளுக்கு எதிராக ஐரோப்பிய ஒன்றியமும் செயற்படும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.


கருத்துரைகள்


கருத்துரைகள் இல்லை


 

தொடர்புடைய செய்திகள்