கனடா செய்திகள்

கனடாவில் 12 வயதிற்கு உட்பட்டோருக்கான தடுப்பூசி

12 Oct 2021

கனடாவில் 12 வயதிற்கு உட்பட்டோருக்கான தடுப்பூசி அனுமதி கோரியுள்ளதாக பைசர் நிறுவனம் தெரிவித்துள்ளது. தடுப்பூசிக்கான அனுமதி கிடைத்ததும் மிக விரைவில் நடவடிக்கை முன்னெடுக்கவும் தயாராக உள்ளதாக பைசர் அறிவித்துள்ளது.

5 முதல் 11 வயது வரையான சிறார்களுக்கான தடுப்பூசி தொடர்பில் தரவுகளை பைசர் நிறுவனம் கனேடிய நிர்வாகத்திடம் சமர்ப்பித்துள்ளது. இது தொடர்பான இறுதிகட்ட முன்னெடுப்பில் இருப்பதாக பைசர் நிறுவன அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

குறித்த தடுப்பூசியானது 16 வயதிற்கு உட்பட்டவர்களுக்கு கடந்த டிசம்பரில் அனுமதியளிக்கப்பட்டுள்ளது. மேலும் 12ல் இருந்து 15 வயது சிறார்களுக்கு மே மாதம் அனுமதிக்கப்பட்டுள்ளது.

5 முதல் 11 வயதுடையவர்களுக்கு அளிக்கப்பட்ட சோதனை முயற்சியில் சாதகமான தரவுகளே கிடைத்துள்ளதாக தெரியவந்துள்ளது.

இளையோர்களுக்கும் பெரியவர்களுக்கும் செலுத்தப்படும் டோஸ்களின் மூன்றில் ஒரு பகுதியே சிறார்களுக்கு அளிக்கப்பட்டது. தற்போதைய தரவுகள்படி கனடாவில் 12 வயதுக்கு மேற்பட்டவர்களில் 80 வீதமானோருக்கு முழுமையாக தடுப்பூசி அளிக்கப்பட்டுள்ளது.


கருத்துரைகள்


கருத்துரைகள் இல்லை


 

தொடர்புடைய செய்திகள்


Powered by Jasper Roberts - Inayam