கனடா செய்திகள்

கனடாவில் வேலைவாய்ப்பு பெற்றவர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு

12 Jan 2018

கனடாவில் வேலைவாய்ப்பு பெற்றவர்களின் எண்ணிக்கையின் அதிகரிப்பு  கடந்த 40ஆண்டுகளாக காணாத அளவு முன்னேற்றத்தை கண்டுள்ளது.

அண்மையில் வெளியான புள்ளிவிபரத் தகவலின் படி 2017ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் வேலையற்றோரின் சதவீதம் 5.7 ஆக குறைவடைந்துள்ளதாகவும், குறித்த இந்த அளவு கனடாவின் வேலையற்றோரின் சதவீதத்தில் கடந்த 40 ஆண்டுகள் காணாத அளவு குறைவை ஏற்படுத்தியுள்ளது என்றும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

2017ஆம் ஆண்டில் வழங்கப்பட்ட மொத்த வேலை வாய்ப்புகளின் எண்ணிக்கை 4,22,500ஐ எட்டியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

2017ஆம் ஆண்டு ஒக்டோபர், நவம்பர், டிசம்பர் ஆகிய மூன்று மாதங்களில் மட்டும் 1,93,400 பேருக்கு வேலை வாய்ப்புகள் கிடைத்துள்ளதாகவும், 1976ஆம் ஆண்டின் பின்னர் மிகக்குறுகிய காலத்தில் கிடைக்கப்பெற்ற அதிக எண்ணிக்கையிலான வேலை வாய்ப்பு இது எனவும் சுட்டிக்காட்டப்படுகிறது.

 


கருத்துரைகள்


கருத்துரைகள் இல்லை


 

தொடர்புடைய செய்திகள்

Inayam TV