கனடா செய்திகள்

கனடாவில் விற்பனை செய்யப்படும் உணவுகளில் களைகொல்லி ஆய்வில் தகவல்!

14 Sep 2018

கனடியர்களுக்கு அதிர்ச்சி தரும் ஒரு செய்தியை சுற்றுச்சூழல் பாதுகாப்பு மற்றும் அனெஸ்கோ ஆய்வகத்தின் சமீபத்திய ஆய்வறிக்கை கூறியுள்ளது.


நாங்கள் சாப்பிடும் உணவுகளில் பிரசித்தமான களை கொல்லியான ரவுண்ட் அப் ( Roundup ) எனப்படும் களை கொல்லி சிறிதளவு சேர்க்கப்படுவதாக கண்டறியப்பட்டுள்ளது, இக்களை கொல்லியானது 18 வகையான நிறுவனங்களின் உணவுகளை பரிசோதித்ததில் அதில் 14  வகையான உணவுகளில் இந்த கிருமி நாசினி கண்டறியப்பட்டுள்ளது.

 

ரிம் ஹர்ட்டன் பேகிள்,ரிம் பிட்ஸ், கிராவட் டின்னர்( Kraft Dinner), சபாரா ஹம்மஸ்(Sabra hummus), சீரியல்ஸ்(Cheerios and other cereals), ஓறியோ(Oreos), அரோவ் ரூட் பிஸ்கட்(Arrowroot cookies), குவாக்கர் ஓட்ஸ்(Quaker Oats), போகோஸ்(Pogos) ஆகியவை இந்த களை கொல்லியின் சிறிய அளவை கொண்டுள்ளது என இந்த அறிக்கை தெரிவிக்கிறது.

 

ஆனால் இந்த உணவுகளில் காணப்படும் குறித்த இரசாயணபொருள் அளவு கனடிய சுகாதார விதிகளுக்கமைய பாதுகாப்பானது எனினும் கனடிய அரசாங்கம் களை கொல்லியை உணவுகளில் கலப்பதற்கு அனுமதிப்பது ஆபத்து என்பதை உணராதது ஏன்? இருப்பினும் கனடியர்களுக்கு இந்த உணவுகளில் கலக்கும் பதார்த்தங்களின் பெயர் பட்டியலில் இந்த களை கொல்லி பெயர்  இல்லை.

 

இதில் சம்பந்தப்பட்டுள்ள அனைத்து உணவு நிறுவனங்களும் இந்த Glyphosate எனும் மருத்துவ பெயரை உடைய இந்த களை கொல்லியை கடந்த 40 வருடங்களுக்கு மேலாக பாவிப்பதாகவும் இந்த நான்கு தசாப்தங்களில் பல்வேறு ஆராயச்சியாளர்கள் ஆய்வுகளை மேற்கொண்டனர் இந்த ஆய்வுகளில் கிளைப்போசட் பயன்படுத்துவது பாதுகாப்பானது என்று ஆராயச்சியாளர்கள் நிருபித்துள்ளார்கள் என இந்த குற்ற சாட்டை மறத்துள்ளன.


பரிசோதிக்கப்பட்ட தயாரிப்புகளின் முழு பட்டியலும் மற்றும் அவற்றின் கிளைபோசேட் (Glyphosate) உள்ளடக்க அளவும்


கருத்துரைகள்


கருத்துரைகள் இல்லை


 

தொடர்புடைய செய்திகள்