கனடா செய்திகள்

கனடாவில் சில்லறை வியாபாரம் வீழ்ச்சி

23 Sep 2022

கனடாவில் சில்லறை வியாபாரம் வீழ்ச்சியை பதிவு செய்துள்ளதாக கனடிய புள்ளி விபரவியல் திணைக்களம் அறிவித்துள்ளது. நாட்டின் கடந்த ஜூலை மாதம் சில்லறை விற்பனை இரண்டு தசம் ஐந்து வீதத்தினால் வீழ்ச்சியடைந்துள்ளது.

கடந்த ஏழு மாதங்களில் முதல் தடவையாக இவ்வாறு சில்லறை விற்பனை தொகை குறைவடைந்துள்ளது.

எரிபொருள் நிரப்பு நிலையங்கள் ஆடை விற்பனை நிலையங்கள் என்பவற்றில் விற்பனை குறைவடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

கடந்த ஜூலை மாதம் 11 துணை துறைகளில் ஒன்பது துறைகளில் விற்பனையானது வீழ்ச்சியை பதிவு செய்துள்ளது.

எரிபொருள் நிரப்பு நிலையங்களில் சில்லறை வியாபாரம் 14.2 வீத வீழ்ச்சியை பதிவு செய்துள்ளதாக புள்ளிவிபரவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.


கருத்துரைகள்


கருத்துரைகள் இல்லை


 

தொடர்புடைய செய்திகள்


Powered by Jasper Roberts - Inayam