கனடா செய்திகள்

கனடாவில் அவசரமாக தரையிறங்கிய பிரித்தானிய விமானம்

13 Sep 2018

பிரித்தானிய விமானமொன்று பறந்துகொண்டிருக்கும் வேளையில், விமானத்தின் முன்தளத்தில் புகை வெளிப்பட்டதால் உடனடியாக கனடாவில் தரையிறக்கப்பட்டுள்ளது.

பிரித்தானியாவிலிருந்து புறப்பட்ட பிரிட்டிஸ் எயார்வேஸ் விமானத்தின் முன்னுள்ள தளத்திலிருந்து புகை வெளிப்பட்டதால் உடனடியான, கனடாவின் இகலூட் நகர விமான நிலையத்தில் நேற்று புதன்கிழமை தரையிறக்கப்பட்டுள்ளது.

புகை ஏற்பட்டதைத் தொடர்ந்து, கனடாவின் இகலூட் சர்வதேச விமான நிலையத்துடன் தொடர்புகொண்டு அனுமதி பெற்று உடனடியாக தரையிறக்கியதாக அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.

குறித்த விமானத்தில் சுமார் 200 பேர் வரை பயணம் செய்துள்ளதாக ஊடகங்கள் தெரிவித்துள்ளன. தொழிநுட்பக் கோளாறு காரணமாகவே புகை வெளிவந்ததாக அதிகாரிகள் குறிப்பிட்டுள்ளனர். மேலும், பயணத்தில் ஏற்பட்ட தடங்களுக்கு வருந்துவதாக விமானத்தின் பணியாளர்கள் பயணிகளிடம் மன்னிப்புக் கோரியுள்ளனர்.


கருத்துரைகள்


கருத்துரைகள் இல்லை


 

தொடர்புடைய செய்திகள்