கனடா செய்திகள்

கனடாவின் அனைத்து நகர பிதாக்களும் ஒன்றுகூடி போக்குவரத்து நெரிசல்கள் குறித்து ஆராய்வு

09 Sep 2019

கனடாவின் அனைத்து நகர பிதாக்களும் ரொறன்ரோவில் ஒன்றுகூடி, போக்குவரத்து நெரிசல்கள் மற்றும் அவற்றைச் சரிசெய்வதற்கான கட்டுமானங்கள் குறித்து ஆய்வு செய்துள்ளனர்.

கனேடிய தேசிய நகரப் போக்குவரத்து கழக அதிகாரிகள் மாநாடு இடம்பெறும் நிலையில், அந்த மாநாடு இடம்பெறும் சென் லோறன்ஸ் மார்கெட் பகுதியில் நகரபிதாக்களின் இந்தத் தனிப்பட்ட சந்திப்பு நேற்று  பிற்பகல் ஒரு மணிக்கு நடைபெற்றது.

பொதுப் போக்குவரத்து ஏற்பாடுகளுக்காக மத்திய அரசின் நிதி வழங்கும் திட்டம் எதிர்வரும் 2027ஆம் ஆண்டுடன் காலாவதியாகவுள்ள நிலையில், நிலையான போக்குவரத்து கட்டுமான நிதியளிப்பு பொறிமுறை ஒன்றினை ஏற்படுத்துமாறு இந்த நகர பிதாக்கள் குழு, இந்தக் கூட்டம் ஊடாக மத்திய அரசினைக் கோரும் என்று தெரிவிக்கப்படுகிறது.


கருத்துரைகள்


கருத்துரைகள் இல்லை


 

தொடர்புடைய செய்திகள்