கனடா செய்திகள்

கனடாவிடமிருந்து உலங்குவானூர்திகளை வாங்கும் திட்டத்தை பிலிப்பைன்ஸ் கைவிடவுள்ளது

12 Feb 2018

கனடாவில் இருந்து 233 மில்லியன் டொலர்களுக்கு உலங்குவானூர்திகளை வாங்கும் திட்டத்தை பிலிப்பைன்ஸ் கைவிடவுள்ளது.

கனேடிய தயாரிப்பு பெல் ரக உலங்குவானூர்திகளை கொள்வனவு செய்வதற்கான ஒப்பந்தம் ஒன்று கடந்த செவ்வாய்க்கிழமை மேற்கொள்ளப்பட்டது.

ஆனால், இந்த உலங்குவானூர்திகள் பிலிப்பைன்ஸில் உள்நாட்டு கிளர்ச்சியாளர்களுக்கு எதிரான நடவடிக்கைகளின் போது பயன்படுத்தப்படும் என்று அந்த நாட்டு இராணுவ அதிகாரி ஒருவர் தெரிவித்ததை அடுத்து, இந்த விநியோகம் தொடர்பிலான மீளாய்வு உத்தரவு கனேடிய அரசினால் பிறப்பிக்கப்பட்டது.

இந்த நிலையிலேயே கனடாவிடம் இருந்து 16 உலங்குவானூர்திகளை கொள்வனவு செய்யும் அந்தத் திடடத்தினை கைவிடுமாறு அந்த நாட்டு இராணுவத்திற்கு உத்தரவிட்டுள்ள பிலிப்பைன்ஸ் அதிபர், இந்த கொள்வனவு நடவடிக்கை தொடர்பில் மேற்கொண்டு நடவடிக்கை எதனையும் எடுக்க வேண்டாம் என்றும் இராணுவத்துக்கு தெரிவிக்கவுள்ளார்.

அதேவேளை தாம் வேறு விநியோகஸ்தர்களை நாடவுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். அத்துடன் கனடாவும், அமெரிக்காவும் பொருட்களுடன் நிபந்தனைகளையு்ம சேர்த்தே வினியோகிப்பதாகவும் அதனால் இந்த இரண்டு நாடுகளிடமிருந்தும் இனியொருபோதும் ஆயுதங்களையும் வாங்க வேண்டாம் என்றும் தனது இராணுவத்துக்கு அவர் உத்தரவிட்டுள்ளார்.


கருத்துரைகள்


கருத்துரைகள் இல்லை


 

தொடர்புடைய செய்திகள்