கனடா செய்திகள்

கத்தி முனையில் கொள்ளைச் சம்பவத்தில் ஈடுபட்ட சிறுவர்கள் கைது

17 Jul 2017

நோர்த் யோர்க் உயர்நிலை பாடசாலைக்கு வெளியே கத்தி முனையிலான கொள்ளைச் சம்பவத்தில் ஈடுபட்ட பதின்மவயதுச் சிறுவர்கள் நால்வரை பொலிஸார் கைதுசெய்துள்ளனர்.

இவ்வாறு கொள்ளையில் ஈடுபட்டவர்களில் இருவர் 16 வயதுடையவர்கள் எனவும், மற்றைய இருவரும் 15 மற்றும் 14 வயதேயான சிறுவர்கள் எனவும் இவர்கள் மீது கொள்ளை மற்றும் ஆயுத பயன்பாடு தொடர்பிலான குற்றச்சாட்டுகள் பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.

ஆனால் 18 வயதுக்கும் குறைவானவர்கள் என்பதன் காரணமாக அவர்களது பெயர் விபரங்களை வெளியிட பொலிஸார் மறுப்பு தெரிவித்துள்ளனர்.

கடந்த வெள்ளிக்கிழமை, நோர்த் யோர்க் உயர்நிலை பாடசாலைக்கு வெளியே நின்றிருந்த 17 வயது சிறுவன் ஒருவனை அணுகிய வேறு நான்கு சிறுவர்கள், கத்தியைக் காட்டி மிரட்டி அவனிடம் இருந்த பெறுமதியான பொருட்கள் அனைத்தையும் கொள்ளையிட்டு சென்றமை குறிப்பிடத்தக்கது.


கருத்துரைகள்


கருத்துரைகள் இல்லை


 

தொடர்புடைய செய்திகள்

Inayam TV