கனடா செய்திகள்

கத்திக் குத்து தாக்குதல்களில் மூவர் பலி

21 Sep 2022

ரொறன்ரோவில் இரு வேறு இடங்களில் இடம்பெற்ற கத்திக் குத்து தாக்குதல்களில் மூன்று பேர் கொல்லப்பட்டுள்ளனர்.

ரொறன்ரோவின் இட்டாபிகொக்கில் அமைந்துள்ள குடியிருப்பு ஒன்றில் கத்திக் குத்து தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.

இந்த தாக்குதல் சம்பவத்தில் இரண்டு பேர் கொல்லப்பட்டுள்ளனர். இந்த சம்பவத்தில் மேலும் ஒருவர் காயமடைந்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.

இந்த சம்பவம் இஸ்லிங்டன் மற்றும் பெர்காமொட் ஆகிய வீதிகளுக்கு அருகாமையில் இடம்பெற்றுள்ளது. தாக்குதலுக்கு இலக்கானவர்கள் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளனர்.

இந்த தாக்குதல் சம்பவம் தொடர்பில் ரொறன்ரோ பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.

இதேவேளை, ரொறன்ரோவின் ஜேன் வீதி மற்றும் டிரிப்வுட் வீதிக்கு அருகாமையில் மற்றுமொரு கத்திக் குத்து தாக்குதல் சம்பவம் இடம்பெற்றுள்ளது. இரண்டு பேர் மீது கத்திக் குத்து தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. இந்த சம்பவத்தில் ஒருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளதுடன் மற்றையவர் படுகாயமடைந்துள்ளார்.

சம்பவத்தில் காயமடைந்தவர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக ரொறன்ரோ பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

இந்த தாக்குதல் சம்பவத்துடன் தொடர்புடையவர் என சந்தேகிக்கப்படும் நபர் ஒருவரை பொலிஸார் கைது செய்துள்ளனர்.

அண்மைய நாட்களாக ரொறன்ரோவில் இவ்வாறான கத்திக் குத்து தாக்குதல் சம்பவங்கள் அதிகரித்துள்ளமை குறிப்பிடத்தக்கது. 


கருத்துரைகள்


கருத்துரைகள் இல்லை


 

தொடர்புடைய செய்திகள்


Powered by Jasper Roberts - Inayam