இலங்கை செய்திகள்

கண்டியில் இடம்பெற்றது மிருகத்தனமான சம்பவம் - நவநீதம் பிள்ளை

13 Mar 2018

கண்டியில் முஸ்லிம் மக்களுக்கு எதிராக சிங்கள பௌத்தர்களால் கட்டவிழ்த்து விடப்பட்ட வன்முறைத் தாக்குதலானது மதம் சார்ந்த தாக்குதல் அல்ல. ஒரு சமூகம் சந்தித்த மிருகத்தனமான சம்பவங்களின் மற்றொரு வெளிப்பாடாக உள்ளது என்று முன்னாள் ஐ. நா மனித உரிமைகள்  ஆணையாளர் நவநீதம் பிள்ளை தெரிவித்துள்ளார்.

கண்டியில் பாதிக்கப்பட்ட ஒரு சிறுபான்மையினத்தவரை சட்டம் பாதுகாக்கவில்லை. நாளை, இதே நிலை பெரும்பான்மை மக்களுக்கு ஏற்படலாம் எனவும் அவர் எச்சரித்துள்ளார்.


கருத்துரைகள்


கருத்துரைகள் இல்லை


 

தொடர்புடைய செய்திகள்