இலங்கை செய்திகள்

கட்டண மீற்றர் இன்றிச் செலுத்தப்படும் முச்சக்கர வண்டிகளுக்கு தண்டம்

12 Jul 2018

கட்டண மீற்றர் இன்றிச் செலுத்தப்படும் முச்சக்கர வண்டிகள் தொடர்பிலான சோதனை நடவடிக்கை, எதிர்வரும் முதலாம் திகதியிலிருந்து, ​பொலிஸார் முன்னெடுக்கவுள்ளதாக வீதிப் பாதுகாப்புத் தொடர்பிலான தேசிய சபை தெரிவித்துள்ளதுடன், அவ்வாறு முச்சக்கர வண்டிகளைச் செலுத்துவோரிடமிருந்து தண்டம் அறவிப்படும் என்றும் அறிவித்தல் விடுக்கப்பட்டுள்ளது.

போக்குவரத்து அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா, அதற்கான அனுமதியைப் பெற்றுக்கொடுத்துள்ளாரென, அந்தச் சபையின் தலைவர்  சிசிர கோதாகொட தெரிவித்தார்.

எதிர்வரும் ஆகஸ்ட் மாதம் 1ஆம் திகதியிலிருந்து, முச்சக்கர வண்டிகளில், கட்டண மீற்றர் பொருத்தப்படுவது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. அவ்வாறு மீற்றரில்லாத முச்சக்கர வண்டிகளைச் செலுத்தும் சாரதிகளுக்கெதிராக, சட்டரீதியிலான நடவடிக்கைகளை எடுப்பதற்கும் பொலிஸாருக்கு அதிகாரமளிக்கப்பட்டுள்ளது  எனவும் அவர் தெரிவித்தார்.

 


கருத்துரைகள்


கருத்துரைகள் இல்லை


 

தொடர்புடைய செய்திகள்