இலங்கை செய்திகள்

கட்சித் தாவல்கள் இடம்பெறுவதற்கான சாத்தியக் கூறுகள்

15 Apr 2019

பிரதான அரசியல் கட்சிகளிலிருந்து கட்சித் தாவல்கள் இடம்பெறுவதற்கான சாத்தியக் கூறுகள் காணப்படுவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

தேசிய மட்டத்திலான தேர்தலொன்று அறிவிக்கப்படும் பட்சத்தில் இவ்வாறான நடவடிக்கைகள் சூடுபிடிக்க ஆரம்பிக்கும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

இதற்கமைய ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் உறுப்பினர்கள் சிலர் ஐக்கிய தேசியக் கட்சியில் சங்கமிக்கக்கூடும் எனவும், அதேபோல் ஐ.தே.க. மீது அதிருப்தியில் இருக்கும் அக்கட்சி உறுப்பினர்கள் சிலர் மஹிந்த அணியுடன் கைகோர்க்கக் கூடும் எனவும் எதிர்பார்க்கப்படுகின்றது.

அரசியல் கட்சிகளின் மே தினக் கூட்டங்களின் போது இதற்கான அடித்தளத்தை அரசியல் பிரமுகர்கள் இடக்கூடும் என எதிர்பார்க்கப்படுகின்றது.


கருத்துரைகள்


கருத்துரைகள் இல்லை


 

தொடர்புடைய செய்திகள்