இந்தியா செய்திகள்

கடைசி கட்ட தேர்தல் பிரச்சாரம் நாளையுடன் ஓய்கிறது

16 May 2019

டைசிக் கட்ட மக்களவைத் தேர்தல் மற்றும் தமிழகத்தில் 4 தொகுதி இடைத் தேர்தலுக்கான பரப்புரைகள் நாளையுடன் நிறைவடைகின்றன. 

மக்களவைக்கு 7 கட்டத் தேர்தல் அறிவிக்கப்பட்டு, இதுவரை 6 கட்டத் தேர்தல்கள் நடந்து முடிந்துள்ளன. கடைசி கட்டத் தேர்தலில் உத்தரப் பிரதேசம் மற்றும் பஞ்சாபில் 13 தொகுதிகள், மேற்கு வங்கத்தில் 9, பீகார் மற்றும் மத்தியப் பிரதேசத்தில் 8, ஜார்க்கண்டில் 3, இமாச்சல் பிரதேசத்தில் 4, சண்டிகர் என 59 தொகுதிகளுக்கு வருகிற 19ந் தேதி வாக்குப்பதிவு நடைபெற உள்ளது.

பிரதமர் மோடி போட்டியிடும் வாரணாசி தொகுதியிலும் ஞாயிற்றுக்கிழமை தேர்தல் நடைபெறுகிறது. கடைசி கட்டத் தேர்தலுக்கான பிரச்சாரம் நாளையுடன் ஓய்வதால் வாக்கு சேகரிப்பு இறுதிக் கட்டத்தை எட்டியுள்ளது.
மேற்கு வங்கத்தில் ஏற்பட்ட மோதலால் இன்று இரவுக்குள் பிரச்சாரத்தை முடிக்குமாறு தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.

தமிழகத்தில் சூலூர், அரவக்குறிச்சி, திருப்பரங்குன்றம், ஒட்டப்பிடாரம் ஆகிய தொகுதிகளில் 15 நாட்களாக நடைபெற்று வரும் பிரச்சாரம் நாளையுடன் நிறைவடைகிறது. இதனால் பல்வேறு கட்சிகளின் தலைவர்கள் அத்தொகுதிகளில் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டுள்ளனர்.


கருத்துரைகள்


கருத்துரைகள் இல்லை


 

தொடர்புடைய செய்திகள்