விளையாட்டு செய்திகள்

கடைசிவரை பெங்களூரு அணிக்காகவே விளையாட விரும்புகிறேன்: யுஸ்வேந்திர சாஹல்

15 Sep 2021

இந்திய சுழற்பந்து வீச்சாளர் யுஸ்வேந்திர சாஹல் பேட்டியில், 'ஐ.பி.எல். போட்டியில், பெங்களூரு அணிக்காகவே விளையாட விரும்புகிறேன்' என்றார்.

ஐ.பி.எல். கிரிக்கெட்டில் பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ் அணிக்காக ஆடும் இந்திய சுழற்பந்து வீச்சாளர் 31 வயதான யுஸ்வேந்திர சாஹல் நேற்று அளித்த ஒரு பேட்டியில்,‘தற்போது எனது முழு கவனமும் அமீரகத்தில் வருகிற 19-ந்தேதி தொடங்கும் ஐ.பி.எல். போட்டி மீது தான் இருக்கிறது. கொரோனா தொற்று பாதிப்பில் இருந்து முடிந்த அளவுக்கு விரைவாக மீண்டு நல்ல நிலைக்கு திரும்ப முயற்சி மேற்கொண்டு வருகிறேன். இலங்கை தொடரில் சிறப்பான பார்மில் இருந்தேன். அதனை ஐ.பி.எல். தொடரிலும் தொடருவேன் என்று நம்புகிறேன். நான் ஓய்வு பெறும் வரை பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ் அணிக்காகவே விளையாட வேண்டும் என்று விரும்புகிறேன். எப்போதெல்லாம் ஐ.பி.எல். போட்டியில் விளையாடுகிறேனோ? அது பெங்களூரு அணிக்காகவே இருக்க வேண்டும் என்பது எனது கனவாகும். கேப்டன் விராட்கோலி வித்தியாசமானவர். அவர் மெத்தனமாக செயல்படுவதை விரும்பமாட்டார். எப்போதும் களத்தில் 100 சதவீத திறமையை வெளிப்படுத்த வேண்டும் என்று எதிர்பார்க்கக்கூடியவர். இது மேக்ஸ்வெல்லுக்கும் தெரியும். இதனால் இங்கு துளி கூட மெத்தனம் காட்ட வாய்ப்பு கிடையாது’ என்றார்.


கருத்துரைகள்


கருத்துரைகள் இல்லை


 

தொடர்புடைய செய்திகள்


Powered by Jasper Roberts - Inayam