கனடா செய்திகள்

கடவுச் சீட்டு பெற காத்திருப்போருக்கு பிரதமர் உறுதி மொழி

23 Jun 2022

கடவுச் சீட்டு பெற்றுக் கொள்வதற்காக நீண்ட வரிசையில் காத்திருப்போருக்கு கனேடிய பிரதமர் ஜஸ்ரின் ட்ரூடோ உறுதிமொழியொன்றை வழங்கியுள்ளார்.

கடவுச்சீட்டு பெற்றுக்கொள்ள மக்கள் நீண்ட வரிசையில் காத்திருப்பது ஏற்புடையதல்ல என அவர் குறிப்பிட்டுள்ளார். இந்தப் பிரச்சினைக்கு விரைவில் தீர்வு வழங்கப்படும் என அவர் உறுதிமொழி வழங்கியுள்ளார்.

பயணிகள் மத்தியில் பெரும் அதிருப்தி நிலைமை காணப்படுவதனை தாம் ஒப்புக் கொள்வதாக அவர்  குறிப்பிட்டுள்ளார்.

கடவுச்சீட்டு விநியோகத்தில் நிலவி வரும் கால தாமதத்தை கருத்திற் கொண்டு ஜனவரி மாதம் 600 பணியாளர்கள் கடவுச்சீட்டு திணைக்களத்தில் இணைத்துக் கொண்டதாகத் தெரிவித்துள்ளார்

இந்த எண்ணிக்கையை மேலும் அதிகரிப்பதற்கு நடவடிக்கைகள் எடுக்கப்படும் எனவும்  பிரதமர் ஜஸ்ரின் ட்ரூடோ மேலும் குறிப்பிட்டுள்ளார். 


கருத்துரைகள்


கருத்துரைகள் இல்லை


 

தொடர்புடைய செய்திகள்


Powered by Jasper Roberts - Inayam