கனடா செய்திகள்

கடவுச்சீட்டுப் பெற காத்திருப்போரின் எண்ணிக்கை அதிகரிப்பு

22 Jun 2022

கடவுச்சீட்டு பெற்றுக் கொள்வதற்காக நீண்ட நாட்கள் முகாமிட்டு தங்கியிருக்க வேண்டிய நிலைமை ஏற்பட்டுள்ளதாக கனேடிய மக்கள் தெரிவிக்கின்றனர்.

கனடாவில் கடவுச்சீட்டு பெற்றுக் கொள்வதற்காக மக்கள் நீண்ட வரிசையில் நாள் கணக்கில் காத்திருக்க நேரிட்டுள்ளது.

இரண்டு ஆண்டுகளாக நிலவிய கோவிட் பெருந்தொற்று நிலைமைகளினால் கடவுச்சீட்டு பெறுவதற்காக காத்திருப்போரின் எண்ணிக்கை வெகுவாக அதிகரித்துள்ளது.

நீண்ட காத்திருப்பு காரணமாக சில கனேடியர்கள் தங்களது வெளிநாட்டு பயணங்களை ரத்து செய்யவும் பிற்போடவும் நேரிட்டுள்ளது.

இவ்வாறான நிலைமைகளினால் பெருமளவு பணத்தையும் இழக்க நேரிட்டுள்ளதாக மக்கள் விசனம் வெளியிட்டுள்ளனர்.

கடவுச்சீட்டு வழங்கப்படும் முறைமை குறித்து மக்கள் கடுமையான அதிருப்தியை வெளியிட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

இதேவேளை, கடவுச்சீட்டு வழங்குவதனை துரிதப்படுத்தும் நோக்கில் 600 பணியாளர்களை புதிதாக கடமையில் அமர்த்தியுள்ளதாக கடவுச்சீட்டு திணைக்களம் தெரிவித்துள்ளது.


கருத்துரைகள்


கருத்துரைகள் இல்லை


 

தொடர்புடைய செய்திகள்


Powered by Jasper Roberts - Inayam