இலங்கை செய்திகள்

கடன் நிவாரணங்களை எதிர்பார்க்கும் நிலை மாற வேண்டும்

25 Jan 2023

வங்கித் துறைக்கு பெரும் பாதிப்பை ஏற்படுத்தக்கூடிய நடைமுறையை தொடர்ச்சியாக ஊக்குவிப்பதில்லை என மத்திய வங்கி ஆளுநர் நந்தலால் வீரசிங்க தெரிவித்துள்ளார்.

பல்வேறு துறைகளைச் சேர்ந்த வணிகங்கள் இன்னும் கடன் நிவாரணங்களை எதிர்பார்க்கும் நிலையில் இருப்பதாக தெரிவித்தார்.

வணிகங்கள் மீட்சியை நோக்கி நகர்வதற்கான வேறு வழிகளை ஆராய வேண்டும் என்றும், வங்கிகளில் தொடர்ந்தும் சார்ந்திருக்கக் கூடாது என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.

நிவாரணம் கேட்கும் முக்கிய துறைகளில் சுற்றுலாவும் ஒன்றாகும் என்றும் தமது துறையை மேற்படுத்தி அதன் மூலம் சுற்றுலா துறையை மீட்டெடுக்க வேண்டும் என்று அவர் குறிப்பிட்டார்.


கருத்துரைகள்


கருத்துரைகள் இல்லை


 

தொடர்புடைய செய்திகள்


Powered by Jasper Roberts - Inayam