கனடா செய்திகள்

கஞ்சாவை பயன்படுத்துவதற்கான வயதெல்லையை 21ஆக அதிகரிக்கும் சட்டமூலம்

06 Dec 2018

கஞ்சாவை பயன்படுத்துவதற்கான வயதெல்லையை 21ஆக அதிகரிக்கும் சட்டமூலமொன்று கனடாவின் கியூபெக் மாகாண அரசால் முன்வைக்கப்பட்டது.

அத்தோடு, வீதிகள் மற்றும் பூங்காக்கள் உள்ளிட்ட பொது இடங்களில் கஞ்சா பயன்படுத்துவதை தடைசெய்யும் மற்றொரு சட்டமூலமும் முன்வைக்கப்பட்டது. குறித்த இரு சட்டமூலங்களும் நேற்று முன்வைக்கப்பட்டன.

கனடாவில் கஞ்சா சட்டபூர்வமாக்கப்பட்டுள்ளதோடு, அதனை பயன்படுத்துவதற்கான வயதெல்லையாக 18 மற்றும் 19 ஆகிய இரு வயதெல்லைகள் அறிவிக்கப்பட்டுள்ளன.

எனினும், இந்த வயதில் கஞ்சாவை பயன்படுத்துவது மூளை வளர்ச்சியை பாதிக்குமென்பது வைத்திய நிபுணர்களின் கருத்தாகவுள்ளது.

இந்நிலையில், அதனை பயன்படுத்தும் வயதெல்லையை அதிகரிப்பது தொடர்பாக கியூபெக் மாகாணம் கடந்த ஒக்டோபர் மாதம் வாக்குறுதி வழங்கியிருந்ததோடு, அது தொடர்பான பிரசாரங்களையும் முன்னெடுத்து வந்தமை குறிப்பிடத்தக்கது.


கருத்துரைகள்


கருத்துரைகள் இல்லை


 

தொடர்புடைய செய்திகள்